Friday 19 December 2014

பத்து ஆண்டுகள் மழை பெய்யாமல் கெடுத்தது; அதிக மழை பெய்து கெடுத்ததில் 100 ஏக்கர் நாசம்

பதிவு செய்த நாள்

19டிச
2014 
04:33
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் வல்லக்குளம் கண்மாய் கால்வாய்க்கான தடுப்பு சுவர் இல்லாததால், 100 ஏக்கரில் நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகியதால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

கண்மாய்கள் நிரம்பின:தூத்துக்குடி அருகே செய்துங்கநல்லூர் பகுதியில் வல்லக்குளம் மற்றும் அரசர்குளம் ஆகிய இரு கண்மாய்களும் மணிமுத்தாறு பாசன பகுதியில் உள்ளது. வல்லக்குளம் கண்மாய் நிரம்பினால் ஆறு மாதங்களுக்கு விவசாயிகளுக்கு பயன் பெறுவார்கள். வல்லக்குளம் கண்மாய்க்கு, அரசர்குளம் கண்மாய் நிரம்பிய பின் தனி கால்வாய் மூலம் வல்லக்குளம் கண்மாய்க்கு தண்ணீர் வருகிறது. தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் போதிய அளவு கனமழை பெய்துள்ளதால், அனைத்து கண்மாய்களும் நிரம்பி வழிகின்றன.

மூழ்கிய பயிர்கள்:கடந்த 10 ஆண்டுகளாக தண்ணீர் பற்றாக்குறையால் தவித்த விசாயிகள், தற்போது போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் நெல் பயிரிட்டு உள்ளனர். இந் நிலையில் அரசர்குளம் கண்மாய் பகுதியில் வல்லக்குளம் வரும் கால்வாய் பகுதி ஒரு புறம் ரோடாகவும், மறு புறம் கரையாகவும் உள்ளது. கரைகளை ஒட்டி அரசர்குளம் பாசனப்பகுதிகளை சேர்ந்த விளை நிலங்கள் உள்ளன. வல்லக்குளம் கண்மாய் நிரம்பியதால், கால்வாய் தண்ணீர் நெல் பயிர்களில் புகுந்துள்ளது. 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள நெல் பயிர்கள் மூழ்கியதில் அழுகி வருகின்றன. விவசாயிகள் 10 ஆண்டுகளாக மழை பெய்யாமல் கெடுத்தது. தற்போது அதிக மழை பெய்து கெடுத்து வருவதால் வேதனையில் உள்ளனர்.

ஜெயபால் விவசாயி கூறியதாவது: 10 ஆண்டுகளாக மழை இல்லாமல் தவித்தோம். தற்போது வல்லக்குளம் நிரம்பியதால், கால்வாய் தண்ணீர் விளை நிலங்களுக்குள் புகுந்துள்ளது. கடன் வாங்கி விவசாயம் செய்த நிலையில் நெல் பயிர்கள் அழுகிய நிலையில் உள்ளன. இந்த கால்வாய் பகுதியில் 300 மீட்டர் நீளத்திற்கு தடுப்புச்சுவர் எழுப்பி தர பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும், இன்று வரை நடவடிக்கை இல்லை. இனியாவது அதிகாரிகள் தடுப்புச்சுவர் கட்டி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும், என அவர் தெரிவித்தார்.

Source: 

No comments:

Post a Comment