Tuesday 23 December 2014

கோவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.12.76 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை

கோவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.12.76 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை

பதிவு செய்த நேரம்:2014-12-23 10:38:44
கோவை, : கோவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்தில் ரூ.12.76 லட்சத்திற்கு 190 குவின்டால் மஞ்சள் விற்பனையானது. கடந்த ஏலத்தை காட்டிலும் மஞ்சள் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கோவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திங்கள், வியாழன் தோறும் மஞ்சள் ஏலம் நடக்கிறது. நேற்று மாலை நடந்த மஞ்சள் ஏலத்தில் விரலி மஞ்சள் 150 குவின்டாலும், கிழங்கு மஞ்சள் 40 குவின்டாலும் என மொத்தம் 190 குவின்டால் விற்பனைக்கு வந்தது.
இதை பூலுவபட்டி, ஆலாந்துறை, செம்மேடு பகுதியை சேர்ந்த விவசாயிகள் கொண்டு வந்தனர். விற்பனைக்கு வந்த மஞ்சள் அனைத்தும் விற்பனையானது.
ஏலத்தில், விரலி மஞ்சள் குவின்டால் ரூ.5,699 முதல் ரூ.7,109 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.6,369 முதல் ரூ.6,587 வரையும் விற்றது.  இதன் மூலம் விரலி மஞ்சள் சராசரி விலை ரூ.6,800. கிழங்கு மஞ்சள் சராசரி விலை ரூ.6,400. ஈரோடு, கோவை, பொள்ளாச்சியை சேர்ந்த வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். விற்பனை மொத்த மதிப்பு ரூ.12.76 லட்சம். 
இது கடந்த ஏலத்தை காட்டிலும் ரூ.2.50 லட்சம் அதிகமாகும். அதே போல், விரலி மஞ்சள் சராசரி விலை குவின்டாலுக்கு ரூ.400ம், கிழங்கு மஞ்சள் ரூ.900 அதிகரித்துள்ளது. கடந்த ஏலத்தை விட மஞ்சள் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Source: 

No comments:

Post a Comment