Monday 8 December 2014

பறவை காய்ச்சல் பீதி எதிரொலி கறிக்கோழி உற்பத்தி குறைப்பு 2 ஆயிரம் பண்ணை கூடங்கள் காலி

கோவை, :   கோவை, திருப்பூர் மாவட்டத்தில் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் 25 பேர் வரை உள்ளனர். இவர்கள் தங்களது தாய் கோழி பண்ணை மூலம் கறிக்கோழி முட்டைகளை உற்பத்தி செய்து, குஞ்சு பொரிப்பான் மூலம் பொரித்து குஞ் சுகளை கூலிக்கு கறிக்கோழி வளர்க்கும் பண்ணையாளர்களிடம் கொடு த்து வளர்க்க செய்கின்றனர். 
விவசாயிகள் சார்பு தொழிலாக பண்ணை நட த்தி வருகின்றனர்.இவ்வாறு கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 15 ஆயிரம் பண்ணைகள் மூலம் கறிக்கோழி வளர்த்து வந்த னர். ஒரு பண்ணை கூடம் 4 அடுக்கு கொ ண்டது.முதல் அடுக் கில் 2 ஆயிரம் குஞ்சுகளை விட்டால், 2 வாரம் கழித்து அவை அடுத்த அடுக்கிற்கு மாற்றப்படும். முதல் அடுக்கில் 2 வாரத்திற்கு பிறகு 2 ஆயி ரம் குஞ்சுகள் விடப்படும்.
இவ்வாறு ஒவ்வொரு பண்ணை கூடத்திலும் சராசரியாக மாதம் 4 ஆயிரம் குஞ்சு விடுவது வழக்கம். 7 வாரம் முதல் 8 வாரம் வரை வளர்க்கப்பட்ட கறிக்கோழிகளை எடை போட்டு, எடை கிலோவிற்கு ரூ.4 வீதம் உற்பத்தியாளர்கள் பண்ணையாளர்களுக்கு வழங்குவார்கள்.
இவ்வாறு மாதம்தோறும் 4 ஆயிரம் கறிக்கோழிகள் ஒவ்வொரு பண்ணையிலிருந்தும் விற்பனைக்காக உற்பத்தியாளர்கள் எடுத்து செல்கின்றனர். இவை சராசரியாக 7 ஆயிரம் கிலோ எடை கொண்டதாக இருக்கும். அதற்குரிய கூலியாக சராசரியாக ரூ.28 ஆயிரம் வரை பண்ணையாளர்களுக்கு கிடைக்கும்.
 இதில் கறிக்கோழி வளர்ப்பிற்கான குடிநீர், பராமரிப்பு ஆள் கூலி, பண்ணை மின் கட்டணம் ஆகியவற்றிற்கு ரூ.18 ஆயிரம் செலவாகும். மீதம் ரூ.10 ஆயிரம் மாத வருமானமாக பண்ணையாளர்களுக்கு கிடைத்து வந்தது. 
இந்நிலையில், ஐயப்ப சீசன், பறவைக்காய்ச்சல் பீதி எதிரொலியாக கறிக்கோழி நுகர்வு குறைந்துள்ளது. இதனால் ஒரு கிலோவிற்கான உற்பத்தி செலவான ரூ.70க்கு கூட விற்க முடியவில்லை. 
கிலோ ரூ.55 முதல் ரூ.62 வரை மட்டுமே விற்கிறது. கடந்த 10 நாளில் கிலோவிற்கு ரூ.10 வீதம் ரூ.10 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 
இதனால் கடந்த ஒரு வாரமாக உற்பத்தியாளர் கள் கறிக்கோழி உற்பத்தியை குறைக்கும் நோக்கில், கறிக்கோழி குஞ்சு உற்பத்தியை பாதியாக குறைத்தனர். இதனால் மாதம் தோறும் 1.60 கோடியாக இருந்த குஞ்சு உற்பத்தி 80 லட்சமாக குறைந்தது. பண்ணைகளுக்கு மாதம் தோறும் வழங்கி வந்த 4 ஆயிரம் கறிக்கோழிகள் 2 ஆயிரமாக குறைந்தது. 
பண்ணையாளர்களுக்கு குஞ்சு வழங்காததால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட பண்ணைகள் காலியாக கிடக்கின்றன. வங்கி கடன் மூலம் பண்ணை அமைத்த விவசாயிகள் பலர் கடனை திருப்பி செலுத்தவும், கறிக்கோழி வருவாயை நம்பி குடும்பம் நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Source: http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=401762&cat=504

No comments:

Post a Comment