Monday 22 December 2014

நெல் கொள்முதல் மையங்கள் அமைப்பது எப்போது? இதுவரை 600 ஏக்கரில் அறுவடை முடிந்தது

பதிவு செய்த நாள்

23டிச
2014 
00:20
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் நெல் அறுவடை துவங்கியுள்ளது; அரசு தரப்பில், கொள்முதல் மையங்கள் இன்னும் துவக்கப்படாமல் உள்ளன.

திருப்பூர் மாவட்டத்தில், அமராவதி பாசன பகுதியான உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாக்களிலும், பவானி பாசன பகுதியான காங்கயம், வெள்ளக்கோவில் தாலுகா பகுதிளிலும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பாண்டு 4,100 எக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செ#யப்பட்டுள்ளது; 29 ஆயிரம் டன் நெல் உற்பத்தியாகும் என எதிர்பார்க்கப்
படுகிறது.நெல் விலை குறைவதை தடுக்கவும், அரசுக்கு தேவையான நெல் கொள்முதல் செய்யும் வகையிலும், ஆதார விலை நிர்ணயித்து கொள்முதல் செய்வது வழக்கம். நடப்பாண்டு சாதாரண நெல், குவிண்டாலுக்கு 1,410 ரூபாய், சன்ன ரக நெல்லுக்கு 1,470 ரூபாய் என ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அறுவடை சமயத்தில், நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் கொள்முதல் மையம் அமைக்கப்படும். நெல் ஈரப்பதமானி, நெல் தூற்றும் இயந்திரங்கள், மின்னனு எடை கருவி ஆகியவற்றுடன், ஜன., 1க்குள் தேவையான அளவு மையங்கள் அமைக்க, மாவட்ட நிர்வாகத்துக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் கடந்தாண்டு 13 மையங்கள் அமைக்கப்பட்டன; அதில், 10 மட்டுமே செயல்பட்டன. 4,000 டன் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது, அமராவதி பாசன பகுதிகளில் அறுவடை துவங்கியுள்ளது. ஏறத்தாழ, 600 ஏக்கர் அறுவடை முடிந்துள்ளது; இதுவரை கொள்முதல் மையம் அமைக்கப் படவில்லை.

விவசாயிகள் கூறியதாவது: அரசு வழங்கும் ஆதார விலை கட்டுப்படியாகாது. கிலோவுக்கு 14 ரூபாய் வழங்கப்பட்டு, தூற்றுவது உள்ளிட்ட செலவுக்கு ஒரு ரூபாய் பிடித்தம் செய்யப்படும். கர்நாடகா சன்ன ரகம் 60 கிலோ மூட்டை 750 முதல் 800 ரூபாய்க்கும், கேரளா மார்க்கெட் நன்றாக உள்ளதால், மோட்டா ரகம் 800 முதல் 900 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வரத்து அதிகரிப்பு காரணமாக, படிப்படியாக விலை குறைந்து வருகிறது. தற்போது ஒரு கிலோ நெல், 15 முதல் 16 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அரசு ஆதார விலைக்கும், மார்க்கெட் விலைக்கும் வித்தியாசம் உள்ளது. அரசு கொள்முதல் மையங்களை நிறுவி, எந்த பிடித்தம் மற்றும் கழித்தல் இல்லாமல், கொள்முதல் செய்து, உடனடியாக பணம் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.
நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் குமுதம் கூறுகையில், ""நேரடி கொள்முதல் மையங்கள் துவங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன; கலெக்டரிடம் அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்ததும் உடனடியாக துவங்கப்படும்,'' என்றார்.

Source: 

No comments:

Post a Comment