Thursday 11 December 2014

இந்தியாவின் தயவால் பாக்.,கில் காய்கறி விலை சரிவு

1டிச
2014 
00:31

பெஷாவர்: பாகிஸ்தானின் வடமேற்கு நகர சந்தைகளில், இந்திய காய்கறிகள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதையடுத்து, காய்கறிகள் விலை சரிவை கண்டுள்ளது.குறிப்பாக, பட்டாணி மற்றும் தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, பாகிஸ்தான் சந்தைகளில் அதன் விலை உச்சத்தில் இருந்தது.இந்நிலையில், அவற்றை இந்தியாவிலிருந்து அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டதையடுத்து, 3 ஆயிரம் ரூபாயாக இருந்த ஒரு மூடை பட்டாணி விலை, 1,200 ரூபாயாகவும், 22 கிலோ தக்காளி மூடை விலை, 700 ரூபாயாகவும் வீழ்ச்சி கண்டுள்ளது.இதுகுறித்து பெஷாவர் சந்தை காய்கறி வியாபாரி, மாலிக் பதே முகமது கூறியதாவது:இந்தியாவிலிருந்து மொத்தம் 25 லாரிகளில், காய்கறி கொண்டு வரப்பட்டது. இதில், 10 லாரிகள் காபூலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது போக, மீதமுள்ள 15 லாரி காய்கறிகள் பெஷாவர் சந்தையில் விற்பனை செய்யப்பட்டன. இந்திய காய்கறிகள் வரத்தால், விலை கட்டுக்குள் வந்துள்ளது. இல்லைெயன்றால், காய்கறிகள் விலை பன்மடங்கு அதிகரித்திருக்கும்.பெஷாவரில் இஞ்சி உற்பத்தி முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து, அதனையும், இந்தியாவிலிருந்து அதிகளவில் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. தற்போது, உள்ளூர் சந்தைகளில், 50 கிலோ இஞ்சி மூட்டை, 4,800 ரூபாய் என்ற அளவில் விற்பனையாகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Source: 

No comments:

Post a Comment