Friday 12 December 2014

மானிய திட்டங்களை அறிந்து பயன்பெற விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு:


பதிவு செய்த நாள்

12டிச
2014 
00:20
கடலூர்: அரசின் மானியத் திட்டங்களை விவசாயிகள் தெரிந்து பயன்பெற வேண்டும் என கலெக்டர் சுரேஷ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். கடலூர் அடுத்த அண்ணாகிராமம் மற்றும் பண்ருட்டி ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் வேளாண் துறை சார்பில் நடைபெறும் திட்டப் பணிகளை கலெக்டர் சுரேஷ்குமார் நேற்று ஆய்வு செய்தார். ஆண்டிப்பாளையத்தில் நடவு துவரை செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது. இத்திட்டத்தில் துவரை பயிர் செய்தால் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது என வேளாண் அதிகாரி தெரிவித்தார்.

புலவனூர் ஊராட்சியில் "தானே' வீடு, பசுமை வீடுகள் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டு, இந்திரா நினைவு குடியிருப்பு சிறப்பு திட்டத்தில் கட்டப்படும் கட்டடத்தை ஆய்வு செய்தார். அப்போது, மணல் கிடைப்பதில் சிரமம் உள்ளதால் பணியை முடிக்க முடியவில்லை என பயனாளி தெரிவித்தார்.பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் ஊராட்சியில் கந்தன்பாளையத்தில் கதிர்வேல் என்பவர் 57 ஆயிரம் ரூபாய் செலவில் அமைத்திருந்த பண்ணைக்குட்டையை பார்வையிட்டார். அண்ணாகிராமம், சின்னபேட்டையில் தோட்டக்கலைத் துறை சார்பில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் சொட்டு நீர் பாசனம் மூலம் சாமந்தி, வீரிய ரக மிளகாய் செடி பயிர்களை பார்வையிட்டார்.

அண்ணாகிராமம் அடுத்த சின்னப்பன்பேட்டையில் சொட்டு நீர் பாசனம் மூலம் பயிரிடப்பட்டுள்ள சாமந்திப்பூ தோட்டத்தை கலெக்டர் சுரேஷ்குமார் ஆய்வு செய்தார். அருகில் திட்ட இயக்குநர் மகேந்திரன்.
தொரப்பாடியில் விவசாயி ரவி என்பவரது வயலில் சூரிய சக்தி மூலம் நீர் இறைக்கும் மோட்டார் அமைப்பை ஆய்வு செய்தார். இதன் மூலம் 5 ஏக்கர் வரை வரை பயிர் செய்யலாம். இத்திட்டத்திற்கு மானியமாக 3.35 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது எனத் தெரிவித்தார். ஆய்வுக்குப்பின் கலெக்டர் சுரேஷ்குமார் கூறுகையில், "ஊரக வளர்ச்சி துறை மற்றும் வேளாண் துறை மூலம் நடந்து வரும் தானே வீடு, இந்திரா நினைவு வீடு, பசுமை வீடுகள் ஆய்வு செய்யப்பட்டது. வேளாண் துறையில் நடவு துவரை, பண்ணைக்குட்டை, தோட்டக்கலைத் துறை சார்பில் சொட்டுநீர் பாசனத்தில் சாமந்தி, வீரிய ரக மிளகாய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சூரிய சக்தி மூலம் மோட்டார் பம்பு செட்டு இயக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களுக்கு அரசு மானியம் வழங்குகிறது. இவற்றை தெரிந்துகொண்டு விவசாயிகள் பயன்பெற வேண்டும்' என்றார்.

Source: 

No comments:

Post a Comment