Monday 15 December 2014

விவசாயம், சிறு, குறுந்தொழில்களுக்கு வாய்ப்பு! கூட்டுப்பொறுப்பு குழுக்களுக்கு கடன்


பதிவு செய்த நாள்

15டிச
2014 
05:19
மதுரை : விவசாயம் மற்றும் சிறு, குறுந்தொழில்கள் செய்வோர் கூட்டுப் பொறுப்பு குழுக்களாக இணைந்தால் வங்கிக் கடன் பெற வாய்ப்பளிக்கப்படுகிறது.நபார்டு வங்கி சார்பில் இதற்கான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

கிராமங்களில் ஒரே மாதிரி பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் ௪ முதல் ௧௦ பேர் ஒருங்கிணைந்து கூட்டுப் பொறுப்பு குழுவை உருவாக்கலாம்.நிலமில்லா விவசாயிகளுக்கு இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதம். தனியார், கோயில் நிலங்களில் குத்தகைக்கு விவசாயம் செய்பவர்கள் ஒருங்கிணைந்து குழுவாகலாம்.மகளிர் சுயஉதவி குழுவில் இருக்கும் தொழில் செய்ய விரும்பும் பெண்கள் மட்டும் குழுவாகலாம். தொண்டு நிறுவனங்கள், உழவர் மன்றங்கள், விவசாய சங்கங்கள், வேளாண் அறிவியல் மையம், கைவினைஞர்கள் சங்கம், சிறு, குறுந்தொழில் செய்வோர் சங்கங்களில் உள்ள உறுப்பினர்கள் கூட்டுப் பொறுப்பு குழுவில் சேரலாம்.
வங்கியின் உதவி பொது மேலாளர் சங்கர் நாராயணன் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் 3000 குழுக்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சொத்துப் பிணையத்திற்கு பதிலாக குழுவில் ஒருவர் கடன் வாங்கினால் மற்றவர்கள் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் குழு உறுப்பினர்கள் வங்கிகளில் தனிநபர் கடன் பெறலாம் அல்லது குழுவின் பெயரில் மொத்தமாக கடன் பெறலாம்.விவசாயம் மற்றும் சிறு, தொழில்களுக்கு ஏற்ப வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படும். குழுக்களாக இணைந்து தொழில் செய்ய வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம். விருப்பமுள்ளவர்கள் அருகில் உள்ள வங்கிக் கிளைகளை அணுகலாம் என்றார்.

Source: 

No comments:

Post a Comment