Friday 12 December 2014

இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை கடந்த சில நாள்களுக்கு முன்பு உருவானது. இதன் காரணமாக, தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகரின் பல இடங்களில் புதன்கிழமை மழை பெய்தது.
வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அதிகபட்சமாக 80 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல் குன்னூரில் 70 மி.மீ, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 50 மி.மீ, திருவள்ளுர் மாவட்டம் மாதவரத்தில் 40 மி.மீ, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி, அம்பாசமுத்திரத்தில் தலா 30 மி.மீட்டரும், காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம், கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம், சிவகங்கை, அறந்தாங்கி, பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் தலா 20 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
முன்னறிவிப்பு: வங்கக் கடலில் உருவான குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, தற்போது தென் மேற்கே இலங்கை, தமிழக கடல் பகுதிக்கு இடையே நிலை கொண்டுள்ளது. இதனால், தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். தென் தமிழகம், உள் தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொருத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். இருப்பினும், அடுத்து வரும் நாள்களில் படிப்படியாக மழை குறையும்.

Source: 

No comments:

Post a Comment