Saturday 27 December 2014

பெரு நெல்லிக்காய் விளைச்சல்:மானாமதுரையில் விற்பனை அமோகம்

பதிவு செய்த நாள்

26டிச
2014 
21:02
மானாமதுரை:மானாமதுரை வட்டாரத்தில் சமீபத்திய மழையால் மருத்துவத்திற்கு பயன்படும் "மெகாசைஸ்' நெல்லிக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது.
மானாமதுரை வட்டாரத்தில் மேலப்பிடாவூர்,சிப்காட்,செய்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நெல்லிக்காய் மரங்கள் அதிகமாக உள்ளது. சமீபத்திய மழையால் நெல்லிக்காய் அதிகளவு விளைச்சல் கண்டுள்ளது.மேலப்பிடாவூர் கிராமத்தில் மட்டும் சுமார் 50 ஏக்கரில் நெல்லி மரங்கள் வளர்க்கப்படுகின்றன.

பெருநெல்லி,சிறுநெல்லி என இரண்டு ரகங்கள் இருந்தாலும் மானாமதுரை பகுதியில் பெருநெல்லி அதிகளவில் பயிரிடப்படுகிறது. மதுரை,திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெரு நெல்லிக்காய்களை மருத்துவ பயன்பாட்டிற்காக வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். சாதாரண நெல்லிக்காய் கிலோவிற்கு 40 முதல் 50 காய்கள் வரை நிற்கும். மேலப்பிடாவூர் பகுதி காய்கள் கிலோவிற்கு 15 முதல் 20 வரையே நிற்கும். ஒவ்வொரு நெல்லிக்காயும் 50 முதல் 100 கிராம் எடை வரை உள்ளது.ஏக்கருக்கு 200 முதல் 300 மரங்கள் வரை நடவு செய்துள்ளனர்.ஒரு நாள் விட்டு ஒரு நாள் நெல்லிக்காய் அறுவடை நடைபெறுகிறது.நாள் ஒன்றுக்கு ஏக்கருக்கு 300 கிலோ வரை நெல்லிக்காய் கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.நன்கு விளைந்த நெல்லிக்காய்கள் கிலோ 50 ரூபாய் முதல் சீசனுக்கு தக்கவாறு விற்பனை செய்யப்படுகிறது.

மேலப்பிடாவூர் கச்சேந்தி கூறுகையில்: 20 ஏக்கரில் நெல்லிக்காய் மரங்கள் உள்ளன. ஒரு நாள் விட்டு ஒருநாள் 300 கிலோ வரை பறித்து மதுரை மார்க்கெட்டிற்கு அனுப்பப்படுகிறது. மரங்கள் நடவு செய்த ஆறு மாதத்தில் இருந்து காய்ப்பு ஆரம்பமாகும். நவம்பர்,டிசம்பரில் நெல்லிக்காய் சீசன்.கடந்த இருமாதங்களாக மழை பெய்ததால் விளைச்சல் அதிகரித்துள்ளது. பல இடங்களில் இருந்தும் வரத்து உள்ளதால் விலை குறைந்து விட்டது. மானாமதுரை யில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் நெல்லிக்காய் பிஞ்சிலேயே உதிர்ந்து விடுகிறது என்றார்.

Source: 

No comments:

Post a Comment