Friday 19 December 2014

கோழிக்கொண்டை பூக்களுக்கு அதிக விலை: விவசாயிகள் மகிழ்ச்சி

First Published : 20 December 2014 04:46 AM IST
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பயிரிடப்படும் கோழிக்கொண்டைப் பூக்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இந்த கோழிக்கொண்டைப் பூக்களின் விதையானது 90 நாள்களில் வளர்ந்து செடியாகும். பின்னர் அவை பூக்கத் துவங்கும். தொடர்ந்து 90 நாள்கள் முதல் 120 நாள்கள் வரை பயன் தரும்.
இந்தக் கோழிக்கொண்டைப் பூக்களுக்கு பூச் சந்தைகளில் தற்போது அதிக வரவேற்பு உள்ளது. நல்ல விலைக்கு சந்தைகளில் இந்தப் பூக்கள் வாங்கப்படுவதால் இதைப் பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிலோ ஒன்றுக்கு ரூ. 60 வரை சந்தைகளில் விற்கப்படுகிறது. இந்தப் பூக்கள் ஊத்துக்கோட்டை, பூண்டி, போந்தவாக்கம், வெங்கல், அதைச் சுற்றிய கிராமப் பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுகிறது.
மல்லிகைப் பூக்கள் ரூ.600 வரை விற்கப்படுவதால் காக்கட்டான் எனப்படும் வாசமில்லா பூக்களுக்கு சந்தையில் வரவேற்பு அதிகமாக உள்ளது. இது கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை கிடைக்கிறது. மஞ்சள் சாமந்திப் பூக்கள் ரூ 50க்கு கிடைக்கிறது.

வெங்கல் கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள கோழிக்கொண்டைப் பூ.

Source: கோழிக்கொண்டை-பூக்களுக்கு-அ/article2580481.ece

No comments:

Post a Comment