Wednesday 3 December 2014

சின்ன சின்ன செய்திகள்


பதிவு செய்த நாள்

03டிச
2014 
00:00
யூரியா தட்டுப்பாட்டிற்கு உதவும் இயற்கை வழி முறைகள் : யூரியா தட்டுப்பாடு பிரச்னைக்கு இயற்கை விவசாயத்தில் ஆழ்ந்த அனுபவமுள்ளவரான தஞ்சாவூர் மாவட்டம் தேனாம்படுகை கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன். ஒரு பாத்திரத்தில் 5 கிலோ சாணம், 3 கிலோ மாட்டுச் சிறுநீர், 1/2 கிலோ வெல்லம் ஆகிய மூன்றையும் ஒன்றாக கலந்து மூடிவைத்து நொதிக்கவிட வேண்டும். இன்னொரு பாத்திரத்தில் நன்கு கனிந்த 15 வாழைப்பழம், கால் கிலோ வெல்லத்தை ஒன்றாக கலந்து நொதிக்கவிட வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து இந்த இரண்டு கலவையையும் ஒன்றாக்கி ஓரிரு நாட்களுக்கு நொதிக்க வைக்க வேண்டும். இதனுடன் தலா ஒரு கிலோ ரைசோபியா, அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனாஸ் (இந்த உயிர் உரங்களின் விலை மிகவும் குறைவு. அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் கிடைக்கும்) ஆகியவற்றையும் கலந்து ஒரு நாள் இரவு நொதிக்க விட வேண்டும்.
இந்த கரைசல் தோசை மாவு பதத்திற்கு மாறி இருக்கும். இதோடு இரண்டு கிலோ கடலைப்பிண்ணாக்கு கலந்து சிலமணி நேரம் வைத்திருந்தால், ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு புட்டு பதத்திற்கு மாறி விடும். இதை ஒரு ஏக்கர் நெல்வயலில் பரவலாக தெளிக்க வேண்டும். அடுத்த சில நாட்களில் மண்ணில் நுண்ணுயிரிகள் பெருகி பயிர் பச்சை பிடித்து ஆரோக்கியமாக வளரத் தொடங்கி விடும்.
இந்த இடுபொருளை மேம்படுத்தப்பட்ட அமுதக்கரைசல் என அழைக்கிறார்கள். இதற்கு பதிலாக, இன்னும் எளிய முறையில் அக்கம் பக்கத்தில் கிடைக்கக்கூடிய இலை தழைகளைக் கொண்டே கூட இடுபொருள் தயாரித்து இலைவழி தெளிப்பாகவும் ஊட்டச்சத்து கொடுக்கலாம். இது பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சி விரட்டியாகவும் பயன்படும்.
இதைத் தயாரிக்க, தலா 5 கிலோ வேம்பு, புங்கன் நொச்சி, நெய்வேலி காட்டாமணக்கு, ஆடாதோடை இலைகளை ஒன்றாகக் கலந்து அவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி சுண்டக் காய்ச்ச வேண்டும். பிறகு ஆறவைத்து வடிகட்டி 3 லிட்டர் பசுமாட்டு சிறுநீர் கலக்க வேண்டும். இக்கரைசலில் இருந்து இரண்டு லிட்டர் எடுத்து 26 லிட்டர் தண்ணீர் கலந்து ஒரு ஏக்கருக்கு தெளிக்கலாம்.
இந்த தொழில்நுட்பங்கள் அனைத்தும் யூரியாவைக் காட்டிலும் தழைச்சத்தும், இதர சத்துக்களும் அதிகமாகவே கொடுக்கக் கூடிய செலவு குறைந்த இயற்கையான நுட்பங்களே. இதை விவசாயி அனுபவத்திலிருந்து 
உணர்ந்து சொல்கிறார். தொடர்புக்கு: தேனாம்படுகை பாஸ்கரன், போன்: 94428 71049, மயில்வாகனன், போன்: 98849 04437.
மேம்படுத்தப்பட்ட பசுந்தீவனப்பயிர்கள் சாகுபடி : விவசாயி தானிய மற்றும் பயிறு வகை விதைகளை விதைக்கும் போது தெளிப்பு விதைப்பு முறையைக் கைவிட்டு விதைகளை வரிசை விதைப்பு முறையில் விதைக்க வேண்டும். ஒரு எக்டருக்கு தேவைப்படும் விதைகளைக் கொண்டு கூடுதல் பரப்பளவில் வரிசை முறையில் பயிரிட முடியும். 
மாவுச்சத்து அதிகம் கொண்ட தீவனப்பயிர்களான கோ.3, கோ.4, தீவன மக்காச்சோளம், தீவனச்சோளம் வகைகளை 3 வரிசைகளிலும், அடுத்து புரதச்சத்து அதிகம் கொண்ட பயிறு வகை தீவனப் பயிர்களான முயல் மசால், வேலிமசால், தட்டைப்பயறு ஆகியவற்றை 1 வரிசையிலும் பயிரிட வேண்டும். மீண்டும் அடுத்த 3 வரிசைகள் கோ.3, கோ.4 தீவன மக்காச்சோளம், தீவனச்சோள வகைகள், அடுத்த 1 வரிசையில் முயல் மசால், வேலி மசால், தட்டைப்பயறு என மீண்டும் மாற்று முறையில் பயிரிட வேண்டும்.
இவ்வகையில் நிலத்தினை அறுவடை செய்யும் போது மாவுச்சத்து மற்றும் புரதச்சத்து பசுந்தீவனம் ஒன்றாகக் கிடைப்பதால் அப்படியே கால்நடைகளுக்கு வழங்கலாம். புரதச்சத்து அளிப்பதால் கால்நடைகளில் சினைப்பிடிப்பு சதவீதம் அதிகரிக்கிறது. கால்நடைகளுக்கு தீவனப்பயிர் சாகுபடி மாதிரி பரப்பளவு 10 சென்ட் .
1) கம்பு நேப்பியர் புல் - கோ.4 - 4 சென்ட்
2) தீவனச்சோளம் கோ.எப்.எஸ்.29 - 1 சென்ட்
3) வேலிமசால் - 3 சென்ட்
டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

Source: http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22956&ncat=7

No comments:

Post a Comment