Tuesday 9 December 2014

தேனீக்களின் தெவிட்டாத வருமானம்


பதிவு செய்த நாள்

10டிச
2014 
00:00
மதுரை சத்திரப்பட்டி கல்லம்பட்டியில் மாந்தோப்பில் ஐந்து தேனீப்பெட்டிகளின் மூலம் 45 நாட்களுக்கு ஒருமுறை லாபம் ஈட்டுகிறார் விவசாயி செல்வம். அவர் கூறியது:
மாந்தோப்பில் ஒரே மரத்தைச் சுற்றி ஐந்து தேனீப்பெட்டிகளை வைத்தேன். இதற்கு இடவசதி தேவையில்லை. தோட்டக்கலை இயக்கம் மூலம் தேனீப்பெட்டி, தேனீக்கள் வாங்குவதற்கு 50 சதவீத மானியம் கிடைத்தது. பெட்டி வைத்த 45வது நாளில் இரண்டுலிட்டர் தேன் கிடைத்தது. 
இப்போது மூன்று முதல் நான்கு லிட்டர் வரை கிடைக்கிறது. பெட்டியின் கீழ்ப்பகுதியை ஸ்டாண்டால் இணைத்து மண்ணில் ஊன்றியுள்ளேன். ஸ்டாண்டில் வார்னிஷ் பூசியுள்ளதால் பூச்சி, எறும்புத் தொந்தரவு இருக்காது. 
மரப்பெட்டியின் மேல் பாலிதீன் ஷீட்டால் மூடினால் மழையில் நனையாது. பூக்கள் அதிகமாக இருக்கும் போது ஐந்து லிட்டர் தேன் கிடைக்கும். லிட்டருக்கு ரூ.300 முதல் ரூ.350 வரை கிடைக்கிறது. ஒருமுறை முதலீடு செய்தேன். 45 நாளில் முதலீடு கையில் கிடைத்து விட்டது. அடுத்தெல்லாம் லாபம் மட்டும் தான். 
மானியம் குறித்து மேற்கு ஒன்றிய தோட்டக்கலை உதவி இயக்குனர் காமராஜ் கூறியது:
சொந்த நிலம் இருக்க வேண்டும். நிலத்திலோ, நிலத்தைச் சுற்றியோ பூக்கும் தாவரங்கள் இருக்க வேண்டும். சிட்டா, அடங்கல், ரேஷன் கார்டு நகல், போட்டோ கொடுத்தால் தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் தேனீப் பெட்டிக்கு ரூ.800, தேனீக்களுக்கு ரூ.700 என ரூ.1500 வீதம் ஒரே விவசாயிக்கு 50 பெட்டிகள் அமைப்பதற்கு மானியம் தரப்படும். ஒரு ஏக்கருக்கு ஐந்து பெட்டிகள் தான் அனுமதி. பூந்தோட்டமாக இருந்தால் கூடுதல் பெட்டிகளை வைக்கலாம் என்றார்.
மானிய விவரங்களுக்கு: 98652 80167.
-எம்.எம்.ஜெயலட்சுமி
மதுரை.

Source: 

No comments:

Post a Comment