Monday 22 December 2014

பவானிசாகர் அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு

பவானிசாகர் அணை, கிருஷ்ணகிரி நீர்த்தேக்கம் ஆகியவற்றில்  இருந்து செவ்வாய்க்கிழமை (டிச.23) முதல் தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து காளிங்கராயன் வாய்க்கால் ஆயக்கட்டு நிலங்களுக்கு இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதேபோன்று, கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்தில் இருந்து வலது, இடதுபுறக் கால்வாய்களில் இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடவும் கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.
  மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் பெரிய ஏரியில் இருந்து ஏரியின் கிழக்கு, மேற்கு பிரதான கால்வாய்களில் இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைள் வந்துள்ளன. இதையேற்று, செவ்வாய்க்கிழமை முதல் (டிச. 23) தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
   பவானிசாகர் அணை திறப்பின் மூலம், 15 ஆயிரத்து 743 ஏக்கரும், கிருஷ்ணகிரி நீர்த்தேக்கம் திறப்பால் 9 ஆயிரத்து 12 ஏக்கரும், பாரூர் பெரிய ஏரி திறப்பால் 2 ஆயிரத்து 396 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Source: பவானிசாகர்-அணையில்-இருந்து-/article2584538.ece

No comments:

Post a Comment