Tuesday 23 December 2014

தீவன மரம் பசுந்தீவன உற்பத்தி மூலம் கால்நடை வளர்ப்பு

பதிவு செய்த நாள்

24டிச
2014 
00:00
கால்நடை வளர்த்தால் தான் விவசாயிகள் நீடித்த வேளாண்மையை எளிதில் செய்யலாம். நல்ல லாபம் தரும் காய்கறிகள், பழங்கள் மூலம் வருமானம் பெறுவதை விட தீவன மரங்கள், பசுந்தீவன வகை தாவரங்களையும் தனியாகவோ, வரப்புப் பயிராகவோ கலப்பு பயிராகவும் வளர்க்கலாம். வேலிப் பயிராகவும் பராமரித்தால் லாபம் உண்டு. ஒரு ஏக்கர் பரப்பில் 16000 கிலோ சவுண்டல் எனும் மரப்பயிர் தீவனம் தரும் போது நிறைய ஆடுகள் வளர்க்க வாய்ப்பும் உள்ளது. இவை தவிரவும் கிளரிசிடியா, மல்பரி, பூவரசு, வாதநாராயணன், மரங்கள் பசுந்தீவனம் நிலையாக பெற உதவும்.
பில்லிப்பிசரா, சணப்பை, கொள்ளு, பயறு வகைகள் எல்லாம் நிறைய தீவனம் தரும் வகைகள் தான். தீவன மரம் வளர்ப்பது எளிது. குறிப்பாக அகத்தி, செடி முருங்கை மரங்கள் கூட பல நன்மைகள் பெற உதவுபவை. வறட்சி தாங்கி வளரும் கொழுக்கட்டைப்புல், எருமைப்புல், கம்பு நேப்பியர் புல், குதிரைவாலிபுல், அருகம்புல் முதலியன மேலும் உதவுபவை. உரிய இடம் இருந்தும் முறையாக திட்டமிட்டு கால்நடைகளை சேர்க்காமல் செய்யும் விவசாயத்தால் நல்ல லாபம் வராது. கால்நடைகள் நிரந்தர வங்கிகளாக ஒருமுறை கடனாக வங்கியில்பணம் பெற்று ஆட்டுப்பட்டி கன்றுகள் பண்ணை வைத்தால் கூட ஒரே ஆண்டில் கை நிறைய காசு பார்க்கலாம்.
முடிந்த அளவு முயற்சித்தாலோ போதும். ஒரு ஏக்கர் உள்ள சிறு விவசாயி கூட 50 ஆட்டுக்குட்டிகள் அல்லது 10 கன்றுகள் வளர்த்து 6 மாதம் பராமரித்து விற்றால் கூட ரூ.50,000 தாராளமாக ஆண்டு வருமானம் லாபமாக பெறலாம். தொழில் முனைவோராக இதற்கு ஒருநாள் பயிற்சி மற்றும் நேரடி செயல்விளக்கம் வந்து கூட பயிற்சி தர வாய்ப்பும் உள்ளது.
கால்நடை மூலம் பெறும் கழிவுகளையும் தரமான உரமாக்கி, மண்புழு குழியில் இட்டு மதிப்புக்கூட்டில் நல்ல மண்வளம் பேணுவது தான் இயற்கை வேளாண்மை இதற்கு நிறைய அரசு உதவிகள் உள்ளன. உங்கள் நிலத்தை இயற்கை விவசாயப் பண்ணையாக மாற்ற உரிய தொழில்நுட்ப உதவிகள் தரப்படுகிறது. சிறப்பு பயிற்சிகள் பெற விருப்பம் உள்ளவர்கள் 98420 07125 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
டாக்டர் பா.இளங்கோவன்,
உடுமலை, 
திருப்பூர் மாவட்டம்.

Source: 

No comments:

Post a Comment