Tuesday 9 December 2014

பனிப்பொழிவு அதிகரிப்பால் தக்காளி விளைச்சல் பாதிப்பு

பொள்ளாச்சி:
பொள் ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது பனிப்பொழிவு அதிகமாக இருப்ப தால், தக்காளி செடிகள் வாடிவருகின்றன. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
பொள்ளாச்சியில் வடக்கிபாளையம், புரவிபாளையம், ஜமீன் காளியாபுரம், பெரும்பதி, கோவிந்தனூர், மாப்பிள்ளை கவுண்டன்புதூர், சூலக்கல், நெகமம், கோமங்கலம், தேவனூர் புதூர் மற்றும் கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவிலான விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஈடுபடுகின்றனர். இங்கு ஒவ்வொரு பருவமழையின் போதும் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு குறி ப்பிட்ட நாட்களில் அறு வடை செய்யப்படுகிறது. இந்த ஆண்டில் கடந்த பருவமழையை எதிர்நோக்கி பல கிராமங்களில், சில மாதத்திற்கு முன்பு தக்காளி நடவில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
தற்போது கிராம பகுதிகளில் தக்காளி விளைச்சல் ஓரளவு இருந்தாலும், கடந்த சில வாரங்களாக பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால், அந்த பனிப்பொழிவுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பல கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி செடிகள் வாடிவதங்கியுள்ளன. சில பகுதியில் செடி கருகிய நிலையில் உள்ளன.
இந்த நிலை கிணத்துக்கடவு பகுதியிலேயே அதி கம் உள்ளது. இதனால் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் செடியிலேயே வாடிவதங்கி பழுத்த தக்காளிகளை விவசாயிகள் பறிக்காமல் அப்படியே விட்டு விடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தற்போது மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. இதனால் அந்நேரத்தில் ஒருகிலோ தக்காளி ரூ.7 முதல் அதிகபட்சமாக ரூ.10வரை விற்பனையானது.
ஆனால் தற்போது பனிப்பொழிவால் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்து, ஒருகிலோ ரூ.38 முதல் ரூ.35வரை விற்பனை செய்யப்படுகிறது. பனிப்பொழிவு குறைந்தால் மட்டுமே இனிமேல் தக்காளி விளைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.


Source: http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=402220&cat=504

No comments:

Post a Comment