Friday 19 December 2014

ஆதார விலையை உயர்த்தாததால்கொப்பரை விவசாயிகள் தவிப்பு:

பதிவு செய்த நாள்

20டிச
2014 
03:55
உடுமலை:கொப்பரைக்கான ஆதார விலை உயர்த்தப்படாததால், அரசு கொள்முதல் மையங்கள் முடங்கியுள்ளன. அதனால், தென்னை விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.உடுமலை, பொள்ளாச்சி பகுதியில், ஒரு லட்சம் ஏக்கராக தென்னை சாகுபடி பரப்பு உயர்ந்துள்ளது. உற்பத்தியாகும் தேங்காய்களை கொப்பரையாக மதிப்பு கூட்டி, விற்பனை செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். வெளிச்சந்தையை மட்டும் நம்பியிருந்த கொப்பரை வர்த்தகம், மத்திய, மாநில அரசுகள்
பங்களிப்புடன் ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டதும், மாறியது.ஆரம்பத்தில், கொப்பரை கிலோவுக்கு, 45 ரூபாய் என ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டது. மத்திய அரசின் "நேபட்' நிறுவனம் மூலம் உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளில், கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட்டன.
பல கட்ட போராட்டத்துக்குபின், ஆதார விலை 52.50 ரூபாயாக உயர்த்தப்பட்டது. உற்பத்தி செலவு அதிகரிப்பு, கொள்முதல் மையங்களில் கெடுபிடி, வெளிச்சந்தையில் விலை உயர்வு ஆகிய காரணங்களால், அரசு மையங்களை விவசாயிகள் புறக்கணிக்கத் துவங்கினர். ஆறு மாதத்துக்கும் மேலாக, உடுமலை, மொடக்குப்பட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு கொள்முதல் மையங்கள் முடங்கியுள்ளன.பருவமழைக்கு பின், கொப்பரை உற்பத்தியை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். ஆனால், வெளிச்சந்தையில், "சிண்டிகேட்' அமைத்து, விலை குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, ஆதார விலையை அதிகரித்து, அரசு கொள்முதல் மையம் சீராக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
""பொள்ளாச்சி எம்.பி., மகேந்திரன் கூறுகையில், ""வெளிச்சந்தையில், கொப்பரை விலை சராசரியாக கிலோ 105 ரூபாய் வரை உள்ளது. அரசு மையங்களில் ஆதார விலையை மூன்று ரூபாய் மட்டுமே மத்திய அரசு உயர்த்தியுள்ளது.""பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், 2 லட்சம் மெட்ரிக் டன் வரை
கொப்பரை உற்பத்தி செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க, கொப்பரை கிலோ 140 ரூபாயாக உயர்த்த மத்திய அரசுக்கு கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Source:  

No comments:

Post a Comment