Thursday 11 December 2014

பருவ நிலை மாற்றத்தால் விவசாயம் பாதிக்கும் : ஆய்வில் அதிரடி தகவல்


பதிவு செய்த நாள்

11டிச
2014 
00:54


பெங்களூரு: 'கர்நாடகாவில், மாறி வரும் பருவ நிலையால், விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுவதுடன், மனிதர்களின் உடல் நலனும் பாதிக்கப்படலாம்' என, 'குளோபல் கிரின் குரோத் இன்ஸ்டிடியூட்' மற்றும் 'பெங்களூரு கிளைமேட் சேஞ்ச் இன்ஷியேட்டிவ்' ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சமாளிப்பு
முதல் கட்டமாக, நடத்தப்பட்ட ஆய்வில், பருவ நிலை மாற்றம் ஏற்படும் போது தோன்றும் மாறுதல்களை, எப்படி சமாளிப்பது என்றும், இந்த பாதிப்பை தடுப்பதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.
வரும், 2030ம் ஆண் டில், பருவ மழையின் வழக்கமான தன்மை மாறுவதுடன், அதிக பட்ச வெப்பம், 1.5 முதல், 2 டிகிரி செல்சியஸ் கூடுதலாகும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இந்த பருவ நிலை மாற்றத்தால், அரிசி, சோளம், சிவப்பு பருப்பு போன்ற பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும்.
இந்த மாற்றத்திலிருந்து தப்பிக்க, விவசாய முறைகளை மாற்றுவதுடன், நீர் சேகரிப்பு முறைகளையும் மாற்ற வேண்டியது அவசர கால நடவடிக்கை என, ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கால கட்டத்தில், கர்நாடகாவில், குறைந்த பட்சம், வெப்பநிலை, 0.4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். விஜயபுரா, கலபுர்கி, யாத்கிர், ராய்ச்சூர் மாவட்டங்களில், 0.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்.
வழக்கமாக, ஆண்டு தோறும் பெய்யும் மழையின் அளவு, 10 சதவீதம் குறையும். ஏற்கனவே, கடந்த, 2006 முதல், 2011 வரை, 4.2 மில்லியன் ஹெக்டேர் பயிர்கள், இயற்கை பேரழிவால் அழிந்துள்ளன.
நிலத்தடி நீர்தேவையற்ற நேரங்களில் பெய்யும் மழை மற்றும் வறட்சியால், விளைச்சல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. 37 சதவீதம் விவசாய நிலங்கள், நிலத்தடி நீரையே நம்பியிருந்தாலும், பெரும்பாலான நிலத்தடி நீர் குழாய்கள், தேவையான அளவில் இயங்குவதில்லை.
தற்போது, மாநிலத்தில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில், மூன்றில் ஒரு பங்கு விவசாயத்துக்காக ஒதுக்கப்படுகிறது. வரும், 2030ம் ஆண்டு, விவசாய மின் தேவை இரு மடங்காக உயரும்.
பெங்களூரை பொறுத்த வரை, நடந்து செல்பவர் கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. ஏற்கனவே, பயன்பாட்டிலுள்ள வாகனங்கள் எண்ணிக்கை, 2030ம் ஆண்டில், 40 சதவீதமாக அதிகரிக்கும். தனியார் வாகனங்கள் மாதந்தோறும், 25 ஆயிரமாக அதிகரித்து வருகின்றன. 20 ஆண்டுகளில், இதன் தேவை, நான்கு மடங்காக உயரும். உலகளவில் அடையாளம் காணப்பட்ட, 34 பயோ டைவர்சிட்டி பகுதிகளில், மிகவும் அடர்த்தியான பகுதியாக, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி கருதப்படுகிறது.
வடகிழக்கு மாவட்டங்களில், தண்ணீர் தேவை அதிகரிக்க கூடும். கர்நாடகாவில், 90 தாலுகாக்களில், ஏற்கனவே, நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. மின்சார பற்றாக்குறையும், 13 சதவீதம் அதிகரிக்க கூடும். 2030ம் ஆண்டில், மின் தேவை நான்கு மடங்காக உயரக்கூடும் என, தெரியவந்துள்ளது

Source: 

No comments:

Post a Comment