Tuesday 9 December 2014

மலையை தெய்வமாக வழிபடும் நீலகிரி பழங்குடியின மக்கள்! நாளை சர்வதேச மலைகள் தினம்


பதிவு செய்த நாள்

10டிச
2014 
04:13
ஊட்டி : நீலகிரியில் வாழும் பழங்குடியின மக்கள் மலைகளை தங்களின் தெய்வங்களாக வழிபட்டு வருகின்றனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருக்கும் மலைகள் மற்றும் மலைத் தொடர்களை சிறப்பிக்கும் நோக்கில், டிச., 11ம் தேதியை,'யுனெஸ்கோ' நிறுவனம், 'சர்வதேச மலைகள் தினம்' என, அறிவித்தது.இந்த நாளில், இயற்கை அரணாக திகழும், மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளை பாதுகாக்க, விழிப்புணர்வு இயக்கங்களை வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நீலகிரி சுற்றுச்சூழல், கலாச்சார சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சிவதாஸ் கூறியதாவது: நாட்டின் இயற்கை வள பாதுகாப்புக்கும், கங்கை, யமுனை, காவேரி என ஜீவ நதிகள் வற்றாமல் ஓடவும், கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகள் தான் முக்கிய காரணம். மலைகள், விவசாயத்திற்கு முக்கியமான நீராதாரங்களாக விளங்குகின்றன. வளர்ச்சிப் பணி என்ற பெயரில் மலைகளில் கட்டுமானங்கள் அதிகரிப்பதை தடை செய்ய வேண்டும். மலைப் பகுதிகளில் மண் வளத்தை பாதிக்கும் ஓரின பயிர் சாகுபடி முறையை மாற்ற வேண்டும். வனப்பகுதிகளில், சூழல் சுற்றுலாவுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். தற்போது நிலையிலேயே மலைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு சிவதாஸ் கூறினார்.
பழங்குடியினர் தெய்வம்நீலகிரியில் வாழும் பழங்குடியின மக்கள், அவற்றை தங்கள் மூதாதையர்களின் வாழ்விடங்களாக, வழிப்பாட்டு தலங்களாக வணங்கி வருகின்றனர். தோடர் இன மக்கள், நீலகிரியில் உள்ள மல்லேஸ்வரர் முடி மலையையும், இருளர் இன மக்கள் ரங்கசாமி முகடு மலையையும் தங்களின் புனித தலமாக போற்றி வருகின்றனர். கோத்தர் இன மக்கள், கோத்தகிரி கேத்தரீன் நீர் வீழ்ச்சி மற்றும் அங்குள்ள மலையை வணங்கி வருகின்றனர். 

Source: 

No comments:

Post a Comment