Friday 2 January 2015

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் கூடிய கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் மாரந்தஹள்ளியில் 90 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர், திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் தலா 60 மி.மீ, பென்னாகரம், திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரம் ஆகிய இடங்களில் தலா 50 மி.மீ, மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டி, திருமங்கலம், கடலூர் மாவட்டம் தொழுதூர், திண்டுக்கல், பழனி ஆகிய இடங்களில் தலா 40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
முன்னறிவிப்பு: வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, மத்திய மேற்கு வங்கக் கடல், வடக்கு ஆந்திரம், தெற்கு ஒடிஸாவை ஒட்டிய பகுதிக்கு நகர்ந்துள்ளது.
இதனால், தமிழகத்தில் அடுத்து வரும் நாள்களில் மழையின் அளவு படிப்படியாகக் குறையும். இருப்பினும் தமிழகம், புதுச்சேரியில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொருத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Source: தமிழகம்-புதுச்சேரியில்-மழை/article2599919.ece

No comments:

Post a Comment