Friday 2 January 2015

உடுமலை பகுதியில் கருக்காய் ஆன நெல்

உடுமலை, : பருவமழை போதிய அளவு பெய்ததால் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை நிரம்பியது. இதனால் ஒன்றரை ஆண்டுக்குப்பிறகு விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர். தற்போது அறுவடை நடந்து கொண்டிருக்கிறது. கல்லாபுரம், ராமகுளம் வாய்க்கால் பகுதியில் 3500 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இவை அமராவதி அணையின் நேரடி பாசனத்தில் உள்ளன. 
இதில் கல்லாபுரத்தில் 700 ஏக்கரிலும், ராமகுளம் வாய்க்கால் பகுதியில் 800 ஏக்கரிலும் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் தற்போது அறுவடை நடந்து வருகிறது. நெற்பயிரில் நெல்மணிகளை விட கருக்காய்களே அதிகளவில் உருவாகி உள்ளன. இதனால் நெல் மகசூல் வீழ்ச்சியடைந்துள்ளது.. ஏக்கருக்கு 60 கிலோ எடையில் 50 முதல் 60 மூட்டை நெல் கிடைக்கும். ஆனால், தற்போது 25 மூட்டை நெல்தான் கிடைத்திருக்கிறது.
Source: 

No comments:

Post a Comment