Friday 2 January 2015

நெற்கதிர்கள் காய்ந்ததால் மகசூல் பாதிப்பு: விவசாயிகள் கவலை

பதிவு செய்த நாள்

03ஜன
2015 
02:24
கம்மாபுரம்: கம்மாபுரம் பகுதியில், சம்பா சாகுபடி செய்துள்ள நெற்பயிரில் இலைக் கருகல் நோய் தாக்கி, நெற்கதிர்கள் காய்ந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். காவனூர், மருங்கூர், தேவங்குடி, கார்மாங்குடி, க.தொழூர், கீழப்பாலையூர், கோபாலபுரம், வி.குமாரமங்கலம், சிறுவரப்பூர், உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில், சம்பா சாகுபடி 18 ஆயிரம் ஏக்கர் பரப்பில் கோ.ஆர்-50, கோ-49, பொண்மணி, கோ-43, பி.பி.டி-5402, சொர்ணாசப்-1, உள்ளிட்ட பல ரகங்களை விசாயிகள் பயிர் செய்துள்ளனர். பி.பி.டி., ரகத்தை பயிர் செய்தால், அறுவடை செய்யும் போது விளை நிலத்திலேயே தனியார் வியாபாரிகள் அதிக விலைக்கு கொள்முதல் செய்வதால், ஆர்வத்துடன் விவசாயிகள் அதிக பரப்பளவில் சாகுபடி செய்தனர். இந்த பட்டத்தில், பி.பி.டி., நெற்பயிரில் இலைக்கருகல் நோய் மற்றும் இலை அழுகல் நோய் உட்பட பல்வேறு நோய்கள் தாக்கியதால், நெற் கதிர்கள் வெள்ளை நிறத்தில் காய்ந்தது. பி.பி.டி., தற்போது கதிர் வரும் தருணத்தில் அதிகளவில் நெற்கதிர்கள் காய்ந்ததால், மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கம்மாபுரம் வட்டார விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Source: 

No comments:

Post a Comment