Monday 19 January 2015

உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் டெண்டர்! மக்காளச்சோளம் விலை சரிவை தடுக்க திட்டம்

பதிவு செய்த நாள்

20ஜன
2015 
01:00
உடுமலை : உடுமலை வட்டாரத்தில், மக்காச்சோளம் அறுவடை தீவிரமடைந்துள்ளது. விலை சரிவை தடுக்க, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், டெண்டர் முறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

உடுமலை, குடிமங்கலம் பகுதியில், பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தில், 21 ஆயிரத்து 968 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு பின், அறுவடை பணி தீவிரமடைந்துள்ளது. கடந்த சீசனில், மக்காச்சோளம் 100 கிலோ மூட்டைக்கு, 1,200 ரூபாய் வரை விலை கிடைத்தது. சாகுபடி செலவு அதிகரிப்பால், விலை கட்டுப்படியாகாது என கருதிய விவசாயிகள், இருப்பு வைக்க ஆர்வம் காட்டினர். இதனால், உடுமலை, பெதப்பம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு வரத்து அதிகரித்தது. கடந்த சீசனில் மட்டும், 1,399 மெட்ரிக் டன் மக்காச்சோளம், உடுமலை குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டது.தற்போது அறுவடை சீசன் துவங்கியுள்ள நிலையில், மக்காச்சோளம் விலை மூட்டைக்கு 1,100 முதல் 1,150 ரூபாய் வரை விலை உள்ளது. கடந்தாண்டை விட விலை குறைவாக இருப்பதால், இருப்பு வைத்து விற்பனை செய்யவே விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். விலை சரிவை தடுக்க, டெண்டர் முறையை அமல்படுத்த ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
கண்காணிப்பாளர் சந்திரசேகர் கூறியதாவது: உடுமலையில் மக்காச்சோளத்தை காய வைக்க 5 உலர் களங்கள், இருப்பு வைக்க, 6,500 மெட்ரிக் டன் கொள்ளளவு உடைய 11 குடோன்கள் உள்ளன. மக்காச்சோளம் வரத்து துவங்கியிருப்பதால், போதிய விலை கிடைக்க, டெண்டர் முறை அமல்படுத்தப்படும்; டெண்டரில் பங்கேற்க, தீவன உற்பத்தியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தீவன உற்பத்தியாளர்கள், தங்களுக்கு தேவையான மக்காச்சோளத்தை வேளாண் விற்பனை வாரிய அதிகாரிகள் முன்னிலையில், விவசாயிகளிடம் கொள்முதல் செய்து கொள்ளலாம். இரு தரப்பினரும் பலனடைவர். எடை குறைவு, இடைத்தரகர்கள் ஆதிக்கம் போன்ற பிரச்னை தவிர்க்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Source: 

No comments:

Post a Comment