Friday 2 January 2015

வேளாண் பல்கலை.யில் தேனீ வளர்ப்பு பயிற்சி

கோவை, : கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பூச்சியியல் துறையின் சார்பில் தேனீ வளர்ப்பு சம்பந்தமான ஒருநாள் பயிற்சி வரும் 6ம் தேதி நடக்கிறது. இதில் தேனீ இனங்களை கண்டுபிடித்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம், தேனீக்கு உணவு தரும் பயிர்கள் மற்றும் மகரந்த சேர்க்கை மூலம் மகசூல் அதிகரிக்கும் பயிர்களின் விபரம், தேனை பிரித்தெடுத்தல், தேனீக்களின் இயற்கை எதிர்கள் மற்றும் நோய் நிர்வாகம் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்படும். 
பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் பயிற்சி நாள் அன்று காலை 9 மணிக்குள் வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் பூச்சியியல் துறைக்கு வரவேண்டும். பயிற்சியில் கலந்து கொள்வதற்கு ரூ.250 பயிற்சி கட்டணம் பயிற்சி நாள் அன்று நேரடியாக செலுத்த வேண்டும். பயிற்சி நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆகும். பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 0422-6611214 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source: 

No comments:

Post a Comment