Wednesday 28 January 2015

வன அலுவலர் எழுத்துத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு


தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழு சார்பில் நடைபெறும் வன அலுவலர்கள், கள உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு,
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் இலவசப் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
 வன அலுவலர், கள உதவியாளர் உள்ளிட்ட 181 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நேரடி எழுத்துத் தேர்வு பிப்ரவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. வேளாண்மை,
கால்நடை மருத்துவ அறிவியல், தாவரவியல், வேதியியல், தோட்டக்கலை, கணிதம், இயற்பியல் உள்ளிட்ட 17 பட்டப் படிப்புகளில் ஏதேனும் ஒன்றைப் படித்தவர்கள் இந்தத்
தேர்வை எழுதலாம்.
 இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மனுதாரர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் இலவசப் பயிற்சி வகுப்பு
நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி 2-ம் தேதி முதல் 20-ம் தேதி வரையிலும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் இந்தப் பயிற்சி வகுப்பு
நடைபெற உள்ளது.
 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் இதற்கான ஆதாரம், ஒரு புகைப்படத்துடன் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று பிப்ரவரி 2-ம் தேதிக்குள்
பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) தா.கிறிஸ்துதாஸ் தெரிவித்துள்ளார்.

Source: வன-அலுவலர்-எழுத்துத்-தேர்வு/article2640628.ece

No comments:

Post a Comment