Thursday 19 February 2015

அறுவடைக்கு தயாரான நெற்கதிர்களில் மீண்டும் நாற்றுகள்! வயல் ஈரத்தில் முளைத்ததால் விவசாயிகள் சோகம்

பதிவு செய்த நாள்

20பிப்
2015 
06:44
ஆர்.எஸ்.மங்கலம் : வயலுக்குள் இருக்கும் ஈரப்பதத்தால் விளைந்த நெல்லை அறுவடை செய்வதில் விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அறுவடை செய்யாத நெற்கதிர்கள் மீண்டும் நெல் நாற்றாக முளைத்து விட்டதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள அத்தானூர், காவனூர், துத்தியேந்தல், அடந்தனார் கோட்டை, கருங்குடி, வலமானூர் ஆகிய பகுதிகளில் அக்டோபர் மாதம் விதைப்பு செய்யப்பட்ட நெற்பயிர்கள், ஒரு சில வயல்களில் ஒரே சீராக முளைக்காததால், அப்பகுதிளில் மீண்டும் நெல் விதைப்பு செய்யப்பட்டது. தற்போது அறுவடை சீசனில், மற்ற வயல்களில் நெல் விளைந்த நிலையிலும், ஒரு சில வயல்களில் விளைச்சலுக்கு தயாரான நிலையிலும் உள்ளன. விளைச் சலுக்கு தயாராக இருந்த வயல்களுக்கு இன்னும் தண்ணீர் தேவைப்படுவதால், கண்மாய் நீரை விவசாயிகள் பாய்ச்சினர்.

அந்த தண்ணீர், நெற்கதிர்கள் முற்றிலும் விளைந்த வயல்களிலும் புகுந்ததால், அந்த வயல்கள் ஈரப் பதமாகி, விளைந்த நெற்கதிர்கள் அனைத்தும் மீண்டும் நாற்றுகளாக முளைத்து விட்டன. குறிப்பாக அத்தானூர், காவனூர், துத்தியேந்தல் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 150 ஏக்கரில் இப்படி நெற்கதிர்கள் பாதிப்படைந்துள்ளன. மேலும், ஈரப்பதம் உள்ளதால் நெல் அறுவடை இயந்திரங்கள் வயல்களுக்குள் இறங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Source: 

No comments:

Post a Comment