Wednesday, 4 February 2015

சின்ன சின்ன செய்திகள்

பதிவு செய்த நாள்

04பிப்
2015 
00:00
பனங்கிழங்கு சாகுபடி: பனங்கிழங்கு சாகுபடியை தொடர்ந்து வருபவர்களில் திருநெல்வேலி மாவட்டம், பாறைக்குளம் அருகிலுள்ள மேலபுத்தனேரி கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் தெரிவித்துள்ள தொழில்நுட்பங்கள் அவருடைய 5 பனை மரங்களிலிருந்து 400 பனம் பழங்கள் கிடைக்கும். ஒரு பழத்தில் மூன்று கொட்டைகள் உண்டு. கொட்டைகளை தனியாக பிரித்து ஒரு வாரம் நிழல் காய்ச்சல் விட்டு நிலத்தில் 6 அடி நீளம், 3 அடி அகலத்தில் பாத்தி பிடிச்சு அதில் கொட்டையோட மேல்புறம் வானத்தை பார்த்து இருக்குமாறு நெருக்கமா விதைக்கனும். செம்மண்ணையும், ஆத்து மணலையும் கலந்து போட்டால் நல்லா வளரும். மண்ணுள் சின்ன கல்லுகூட இருக்கக் கூடாது.
கொஞ்சம் எரு போட்டு விட்டா கிழங்கு பெருவெட்டா கிடைக்கும். விதைச்சதும் தண்ணீர் தெளித்து விடனும். பிறகு வாரம் ஒருமுறை தண்ணீர் தெளிச்சா போதும். பனம்பழ வாசத்துக்கு கோழிகள் வரும். அது தோண்டி விடாமல் இருக்க முள் போட்டு பாதுகாக்கனும். புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் கொட்டையை விதைச்சா மார்கழி, தை மாதங்களில் கிழங்காயிடும். கிட்டத்தட்ட 70 நாள்ல கிழங்காயிடும். கிழங்கைப் பிடுங்கி கொட்டையைத் தனியாகவும், காம்பைத் தனியாகவும் வெட்டிடனும். கொட்டையை இரண்டா வெட்டினா உள்ளே இலவம் பஞ்சு நிறத்துல "தவுன்' இருக்கும். தவுன் எடுத்ததுக்கு அப்புறம் கொட்டையை காயவெச்சு அடுப்பு எரிக்கலாம். மரம் இல்லாத போது பனம் பழம் ஒன்று ஒரு ரூபாய்னு விலைக்கு வாங்கி கிழங்கு போடலாம். ஒரு கிழங்கை 3 ரூபாய்க்கு விற்கலாம்.

பேயெள் சாகுபடி:
 கிருஷ்ணகிரி மாவட்டம், கர்நாடக எல்லையை ஒட்டியுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் ஊடுபயிராக பேயெள் பயிர் செய்யப்படுகிறது. பேயெள்ளுங்குறது பார்ப்பதற்கு சூரியகாந்திப்பூ மாதிரி இருக்கும். பூக்கள் சிறியதாக இருக்கும். பூவுக்குள் தான் விதை இருக்கும். விதைப்புக்கு ஆடிப்பட்டம் ஏற்றது. விதைக்கும் போது நிலத்தை 2 சால் உழவு செய்து, 1 சென்டுக்கு 100 கிராம் விதையை அரை கிலோ மணலோடு கலந்து நெருக்கமாக விதைப்பு செய்யனும்.
ஒரு ஏக்கருக்கு 5 கிலோ விதை தேவைப்படும். முளைப்பு வந்த பிறகு ஒருமுறை களை எடுக்க வேண்டும். தொடர்ந்து 20 நாட்களுக்கு மழை இல்லாவிட்டாலும் தாக்கு பிடிக்கும். 20-25 நாட்களுக்கு ஒரு தண்ணீர் கொடுத்தாக் கூட போதும். நல்ல மழை கிடைச்சு நிலத்தில் ஈரம் இருந்தால் நிறைய இலைகள் விட்டு அதிக மகசூல் எடுக்க முடியும். 180 நாட்களில் அறுவடைக்கு வந்து விடும். செடியோட அடிப்பகுதியை விட்டு விட்டு அறுவடை செய்து 4 நாட்கள் காயவைத்து கையில் தட்டி எள்ளை பிரித்தெடுக்கலாம். நல்லெண்ணெய், விளக்கெண்ணெயை விட கூடுதல் மருத்துவ குணம் நிறைந்தது. பேயெள் எண்ணெய் சில ஆண்டுகளுக்கு முன் பையூர் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையம் "பையூர்' என்ற பேயெள் ரகத்தை வெளியிட்டது. விதை 1 கிலோ ரூபாய் 50 என்ற விலையில் கிடைக்கிறது. தொடர்புக்கு: மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பையூர், கிருஷ்ணகிரி மாவட்டம். போன் : 04343 - 290 600.
நெல் வயலுக்கேற்ற புதிய தலைமுறை களைக்கொல்லி "ஈரோஸ்' : நெல் நாற்று நடவாகி 3 நாட்களுக்குள் இட வேண்டும் ஏக்கருக்கு 4 கிலோ அளவில். முக்கால் அங்குலம் உயரத்திற்கு தண்ணீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். "ஈரோஸ்' இட்ட பிறகு 1 வாரத்திற்கு நீர் அடுத்த நிலத்திற்கு வடிந்து விடாமல் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இது ஒரு UPL (United Phosphorus Limited) வெளியீடு. மேலும் விபரங்களுக்கு மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை - 94425 02343, தேனி - 94425 02337, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி -04422 38397, சேலம், நாமக்கல் - 94437 38397, திண்டுக்கல் - 94437 38392, ஈரோடு-94437 38393.
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

Source: 

No comments:

Post a Comment