Wednesday 18 February 2015

சின்ன சின்ன செய்திகள்

பதிவு செய்த நாள்

18பிப்
2015 
00:00
இஞ்சி, மஞ்சள்: குழிகளில் சேமித்து வைத்துள்ள விதைக் கிழங்குகளை 20 நாட்களுக்கு ஒருமுறை கண்காணித்து வதங்கிய மற்றும் நோய் தாக்கிய கிழங்குகளை அகற்றி விட வேண்டும்.
மிளகாய்: கரிசல் மண் பிரதேசங்களில் 20-25 நாட்களுக்கு ஒருமுறையும் செம்மண் பிரதேசங்களில் 10-15 நாட்களுக்கு ஒருமுறையும் நீர் பாய்ச்ச வேண்டும். காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த என்.பி.வி. கரைசலை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் தெளிக்க வேண்டும். காய்ப்புழுக்களின் அந்துப்பூச்சியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க அமைத்துள்ள இனக்கவர்ச்சிப் பொறியின் இனக்கவர்ச்சி வேதிப்பொருளை மாற்ற வேண்டும். கருகல் மற்றும் பழ அழுகல் நோயைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு கேப்டான் 1.5 கிராம் அல்லது காப்பர் ஆக்சி குளோரைடு 3 கிராம் அல்லது மான்கோசெப் 2.5 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
அறுவடையைத் தொடங்கலாம். பறித்த மிளகாய் பழங்களை காலநிலையைப் பொறுத்து 10-15 நாட்கள் சூரியஒளியில் உலர வைக்க வேண்டும். முடிந்த வரைக்கு மிளகாய் உலர்த்தும் இயந்திரம் அல்லது சூரியசக்தி பாலிதீன் உலர் அறைகளால் பயன்படுத்தலாம். உலர்ந்த மிளகாயின் ஈரப்பதம் 8-10 சதத்திற்குள் இருக்குமாறு கவனித்துக் கொள்ள வேண்டும்.
பவர் ஜிம்: கிரீன்ஹவுஸ் ஆர்கானிக்ஸ் வழங்கும் வளர்ச்சி ஊக்கி திரவம்/குருனைகள் எல்லா பயிர்களுக்கும் ஏற்ற ஒரு இடுபொருள். விவசாயி கருப்பணன் (த/பெ.வேடிச்சி, புளிக்கரை போஸ்ட், பாலக்கோடு தாலுகா, தருமபுரி மாவட்டம். மொபைல் : 85089 14595) அவரது சம்பங்கிக்கு பவர் ஜிம்மைப் பயன்படுத்தியதில் பூ பெரியதாகவும் நிறைய அளவு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். பவர்ஜிம் விலை ரூ.640 / லிட்டர். மேலும் விவரங்களுக்கு அஞ்சன், மொபைல்: 96555 55166, ஜெகன் 98652 04567.
எம்.டி.யு. 6 ரக நெல்: இது ஒரு புது வரவு. மகசூல் எக்டருக்கு 6118 கிலோ. வயது 110-115 நாட்கள். குறுகிய கால ரகம். இறவையில் எக்டருக்கு ஏ.டீ.டி.43 ரகத்தை விட 9.8 சதவீதமும், ஏ.டீ.டி. (ஆர்) 45 ரகத்தை விட 10.2 சதவீதமும் அதிக மகசூல் கொடுக்கக் கூடியது. ஈரோடு மாவட்டம், அய்யம்பாளையம் கிராமத்தில் சோதனையின் போது அதிகபட்சமாக ஒரு எக்டரில் 9338 கிலோ நெல் மகசூல் தந்துள்ளது. நீண்ட சன்ன ரக அரிசியைக் கொண்டுள்ள இந்த ரகம் சிறந்த சமையல் பண்புகளை கொண்டுள்ளது. பச்சரிசியாக பயன்படுத்துவதற்கும் பொங்கல், அவல் போன்றவற்றைத் தயாரிப்பதற்கும் ஏற்றது.
இலை சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான், பச்சை தத்துப்பூச்சி வெண்முதுகுப் பூச்சி ஆகியவற்றின் தாக்குதல்களை மிதமான அளவுகளில் தாங்கி வளரக்கூடியது. சொர்னவாரி, கார், குறுவை, நவரை ஆகிய பட்டங்களிலும், குறுகிய கால ரகங்கள் சாகுபடி செய்யும் பகுதிகளிலும் பயிரிட ஏற்ற ரகம். மேலும் விவரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், பயிர் மரபியல் மற்றும் இனப்பெருக்கம் துறை, வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை-625 105. போன் : 0452 - 242 2956.
கேழ்வரகை 2015 மார்ச்சில் விற்கலாம் : வேளாண் சந்தை பொருளியல் ஆய்வுகளின் அடிப்படையில் கேழ்வரகின் பண்ணை விலை டிசம்பர் 2014 முதல் பிப்ரவரி 2015 வரை கிலோ ஒன்றிற்கு ரூ.15 முதல் 16 வரை இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்திற்கு பிறகு சிறிதளவு விலை ஏறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. எனவே உழவர்கள் அறுவடை செய்த கேழ்வரகை சேமித்து வைத்து பிப்ரவரி - மார்ச் 2015 மாதங்களில் விற்பனை செய்யுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் மொத்த கேழ்வரகு உற்பத்தி தேவைக்கும் குறைவாக உள்ளதால் கர்நாடக மாநிலத்திலிருந்தும் வரத்துக்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. தகவல் : முனைவர் ந.அஜ்ஜன், மு.ராஜ்குமார், வேளாண் மற்றும் ஊரக மேம்பாடு ஆய்வு மையம், த.வே.ப.கழகம், கோவை-641 003. போன் : 0422 - 243 1405.
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

Source: 

No comments:

Post a Comment