Wednesday 18 March 2015

மாம்பழங்களைப் பழுக்க வைப்பது எப்படி

பதிவு செய்த நாள்

18மார்
2015 
00:00
மாம்பழ சீசன் ஆரம்பித்து விட்டது. காய்கள் கடைகளுக்கு வந்துள்ளன. இந்நேரத்தில் மாங்காய்களை எப்படி பழுக்க வைக்கலாம் என மக்களுக்கு தெரிவிப்பது சரியான தாக இருக்கும் என நம்புகிறேன். மாம்பழங்களை நன்கு முன்றும் முன்பே விவசாயிகள் அறுவடை செய்ய தொடங்கி விடுகின்றனர். அவற்றைத் தரம் பிரித்து, இயற்கையாகப் பழுக்க வைத்தால் 1 வாரம் முதல் 2 வாரம் ஆகி விடுகிறது. ஆனால் சீராகப் பழுக்காமல், எடை, தரம், நிறம், ருசி சீராக இருப்பதில்லை. இதில் எத்திலீன் வாயு பயன்படுத்தி 3 வகைகளில் பழுக்க வைக்கலாம்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக, மதுரை வேளாண் அறிவியல் மையம் கொடுத்துள்ள ஆலோசனைகள்:
முதல் முறை: முதலில் 100 லிட்டர் தண்ணீர் 50 டிகிரி சி சூடான தண்ணீரில் 62.5 மில்லி லிட்டர் எத்திலீனைக் கலக்க வேண்டும். அந்த நீரில் 100 கிலோ மாம்பழங்களை 5 நிமிடம் வைக்க வேண்டும். இந்த நீரை 4 முறை பயன்படுத்தலாம். பின் நீரை வடித்து மாம்பழங்களை வைக்கோலில் பரப்பி வைக்க வேண்டும். 3 முதல் 5 நாட்களில் நன்கு பழுத்து விடும். இந்நீரை 500 மாம்பழங்களுக்கு பயன்படுத்தலாம்.
இரண்டாம் முறை: 2 மில்லி லிட்டர் எத்திலீனை மாம்பழங்களை (காய்) வைத்துள்ள அறையில் ஆங்காங்கே ஒரு குவளையில் வைத்து, மாத்திரை சோடியம் டை ராக்சைடை இடையில் வைத்து, அந்த அறையை காற்றுப் புகாதவாறு மூடி வைக்க வேண்டும். 4-5 நாட்களில் பழுத்து விடும்.
மூன்றாம் முறை: பிளாஸ்டிக் கிரேடுகளில் பழுக்க வைக்க இருக்கும் காய்களை அடுக்க வேண்டும். இடையில் காகிதம் போட வேண்டும். ஒரு கிரேடுக்கும் அடுத்த கிரேடுக்கும் குறைந்தது 1 முதல் 2 அடி இடைவெளி வேண்டும். கிரேடின் அடிப்பகுதி 10 செ.மீ. உயரத்தில் (தரை மட்டத்தில் இருந்து) இருக்குமாறு வைக்க வேண்டும். பின் கிரேடுகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, அறையில் எத்திலீனைத் தெளிக்க வேண்டும். அறையை மூடி வைத்தால் 48 மணி நேரத்தில் நன்கு பழுத்து விடும்.
இதே முறையில் பப்பாளி, வாழை போன்ற எந்த பழத்தையும் பழுக்க வைக்கலாம். இதனால் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு எவ்வித கேடும் இல்லை. எத்திலீன் இரசாயனப் பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும். இம்முறைகள் பற்றி ஏதேனும் சந்தேகம் வந்தால் அணுக வேண்டிய முகவரி.
முனைவர் தி.ரங்கராஜ், பேராசிரியர் மற்றும் தலைவர், முனைவர் சோ.கமல சுந்தரி, வேளாண்மை அறிவியல் நிலையம் (K.V.K) த.நா. வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மதுரை- 625 106. போன் : 0452 - 242 2955, இமெயில்: kvkmdu@tnau.ac.in, www.tnau.ac.in.
-எம்.ஞானசேகர்,
விவசாய ஆலோசகர்
93807 55629

Source: 

No comments:

Post a Comment