Tuesday 12 May 2015

எலுமிச்சை பயிரிட்டு வாரம் ரூ.10 ஆயிரம் சம்பாதிக்கலாம்

Advertisement

பதிவு செய்த நாள்

13மே
2015 
00:00
திண்டுக்கல் அருகே கோட்டைப்பட்டியை சேர்ந்த விவசாயி ஜெ.சரவணன் ஒரு ஏக்கரில் எலுமிச்சை சாகுபடி செய்தார். இவர் "ராஜமுந்திரி' என்ற நாட்டு ரகத்தை கன்றுக்கு ரூ.50 வீதம் வாங்கினார். 2 அடி ஆழம் 2 அடி அகலம் உள்ள குழிகள் தோண்டி அதில் குப்பையை கொட்டி கன்றுகளை நட்டார். ஒவ்வொரு கன்றும் 20 க்கு 20 அடி இடைவெளியில் நடப்பட்டது. ஒரு ஏக்கரில் 100 கன்றுகளை நட்டார். இயற்கை விவசாய முறையில் உரமிட்டு வருகிறார். 
செடிகள் நட்டு 4 ஆண்டுகளுக்கு பின் காய்க்க துவங்கியது. ஒரு மரத்தில் 100 காய்களுக்கு குறையாமல் காய்க்கின்றன. ஒவ்வொரு பழமும் குறைந்தது 80 கிராம் வரை உள்ளது. சில பழங்கள் 120 கிராம் வரை உள்ளன (சாதாரணமாக 60 கிராம்). தலா ஒரு மாத இடைவெளியில் ஆண்டுக்கு 3 முறை காய்க்கின்றன. ஒவ்வொரு முறையும் 12 வாரங்கள் வரை தொடர்ந்து காய்களை பறிக்கின்றனர். வாரத்திற்கு 400 கிலோ காய்கள் கிடைக்கின்றன. குறைந்தது ரூ.10 ஆயிரம் வரை கிடைக்கிறது. 
விவசாயி கூறியதாவது: எலுமிச்சை செடிகளுக்கு கால்நடைகளின் எரு, கழிவு, குப்பையை உரமாக இடுகிறோம். பசுந்தாள் உரங்களும் பயன்படுத்துகிறோம். 15 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சுகிறோம். நாட்டுரகம் என்பதால் 80 ஆண்டுகள் 
வரை காய்க்கும். செடிகளை முறையாக கவாத்து செய்து பராமரிக்கிறோம். இதனால் காய்கள் பறிப்பதில் சிரமம் இல்லை என்றார். தொடர்புக்கு 97915 00783. 



Source: Dinamalar

No comments:

Post a Comment