Wednesday 27 May 2015

துல்லிய பண்ணைத்திட்டத்தில் 11,500 விவசாயிகளுக்கு ரூ.14 கோடியில் உதவி

துல்லிய பண்ணையத்திட்டத்தில் இதுவரை 11,500 விவசாயிகள் ரூ.14 கோடியில் மதிப்பில் பயனடைந்துள்ளனர்.

கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியம் உப்பிடமங்கலம் பேரூராட்சியில் உள்ள லிங்கத்தூர் பகுதியில் தோட்டக்கலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும்

திட்டப்பணிகளை ஆய்வு செய்ய திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி தலைமையில் செய்தியாளர்கள் பயணம் மேற்கொள்ளப்பட்டது. லிங்கத்தூரில் முன்னோடி

விவசாயி பழனியப்பனின் வயலில் உயர் தொழில் நுட்ப உற்பத்தி பெருக்கும் திட்டத்தின்கீழ் 4 ஏக்கரில் பந்தல் காய்கறி சாகுபடி திட்டத்தில் முழு மானியத்தில் சொட்டுநீர்

பாசன முறையில் புடலை, பீர்க்கங்காய், பாகற்காய், அவரை போன்ற கொடி வகை காய்கறிகள் பயிரிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு அவற்றின் பயன்கள்

குறித்து விவசாயியிடம் கேட்டறிந்தார். அப்போது விவசாயி கூறுகையில், பந்தலில் காய்கறி பயிரிடுவதால் சேதாரம் குறைவு. பிஞ்சுகளும் 100சதவீதம் காய்கறியாகி பலன்

தருவதால் இழப்புக்கு இடமில்லை. சொட்டுநீர் பாசனத்தில் குறைந்த தண்ணீரில் அதிகளவு சாகுபடி செய்வதால் செலவும் குறைவு, லாபம் அதிகம் என்றார்.

 தொடர்ந்து லிங்கத்தூரில் முன்னோடி விவசாயி ராமசாமி விளைநிலத்தில் 10 ஏக்கரில் நுண்ணுயிர் பாசன இயக்கத்திட்டத்தில் மாவகை கன்றுகள்  நடவு செய்திருப்பதை

பார்வையிட்டு சொட்டுநீர் பாசனத்தில் பணிகள் மேற்கொள்வதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தோட்டக்கலைத்துறை மூலம் நான்காண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ள

திட்டங்கள் குறித்து செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறுகையில், மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தோட்டக்கலைத்துறை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உயர் விளைச்சல்

தரும் வீரிய ஒட்டுரக காய்கறி விதைகள் மற்றும் நடவுச் செடிகள் பயிரிட ரூ.116.8 லட்சம் மதிப்பில் 50 சதவீத மானியத்தில் 8,255 விவசாயிகளுக்கு விநியோகம்

செய்யப்பட்டுள்ளது.

 துல்லிய பண்ணையத் திட்டத்தின் கீழ் 250 ஏக்டேரில் ரூ.45.9 லட்சத்தில் உயர் விளைச்சல் தரும் காய்கறி, வாழை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 316

விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மானாவரி பகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் தோட்டக்கலை சார்ந்த பண்ணையம் அமைக்க ரூ.106.37 லட்சம் செலவில் 365 எக்டேர் நிலம்

சீர் செய்து ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு காய்கறி சாகுபடி செய்யும் வகையில் விதைகள், பழக்கன்றுகள், இடுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 398

விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

 தேசிய நுண்ணிய பாசன இயக்கம் மூலம் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மற்றும் 75 சதவீத மானியத்தில் ரூ.748.5

லட்சத்தில் 1871.28 எக்டேரில் 1,430 விவசாயிகள் பயன்பெறும் வகையில் சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது. தேசிய மூலிகை பயிர்கள் இயக்கத்தின் மூலம் ரூ.184

லட்சத்தில் மருந்து கூர்க்கன் மற்றும் கணவலிக்கிழங்கு சாகுபடிக்கென மானியம் பெறப்பட்டு முழுத்தொகையும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

 தொடர்ந்து அம்மா பண்ணை மகளிர் மேம்பாட்டுத்திட்டத்தில் 120 மகளிர் குழு பண்ணைய முறைத்திட்டத்தில் ரூ.16.12 லட்சத்தில் விவசாய பணிகளை செய்து

வருகிறார்கள். ரூ.65.90 லட்சத்தில் உயர்விளைச்சல் காய்கறி சாகுபடி மற்றும் வீரிய ஒட்டு காய்கறி சாகுபடி திட்ட மானியம் 1,000 விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

ஆய்வின்போது தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் வளர்மதி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சொர்ணமாணிக்கம், தோட்டக்கலைத்துறை அலுவலர் பேபி

உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Source : Dhinamani

No comments:

Post a Comment