Monday 18 May 2015

சென்னையில், நுங்கு விற்பனை அமோகம் ஒரு டஜன் ரூ.50-க்கு கிடைக்கிறது

















சென்னை,

கோடை வெயிலில் உடலுக்கு இதமளிக்கும் நுங்கு விற்பனை சென்னையில் தொடங்கி உள்ளது. ஒரு டஜன் ரூ.50-க்கு கிடைக்கிறது.

இயற்கை தந்த நன்கொடை

கோடை கால வெப்பத்தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள இயற்கை தந்த நன்கொடையில் நுங்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

உடல் சூட்டை தணித்து, வேர்குரு போன்ற கோடைகால தீங்குகளை நுங்கு போக்குகிறது. இத்தகைய கோடைகால வெயிலுக்கு அருமருந்தாக திகழும் நுங்கு விற்பனை சீசன் சென்னையில் தொடங்கி உள்ளது.

மலைபோல் குவிப்பு

சென்னையில் கீழ்ப்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்பட நகரின் பெரும்பாலான இடங்களில் ‘நுங்கு’ விற்பனை தொடங்கி உள்ளது. சாலையோர நடைபாதைகளில் மலைபோல குவித்து வைக்கப்பட்டு, விற்பனை மும்முரமாக இருந்து வருகிறது.

வெப்பத்தில் இருந்து இதமளிப்பது மட்டுமின்றி, மருத்துவ குணங்களும் அதிகளவு இருப்பதால், பொதுமக்கள் ஆர்வத்துடன் நுங்குகளை வாங்கி செல்கின்றனர். மக்கள் கூட்டத்தை சமாளிப்பதற்காக சில இடங்களில் 5 அல்லது 6 பேர் குழுவாக அமர்ந்து நுங்குவை வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

1 டஜன் ரூ.50-க்கு விற்பனை

இதுகுறித்து நுங்கு வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

இந்த ஆண்டு நுங்கு சீசன், கடந்த ஆண்டை காட்டிலும் சற்று தள்ளி வந்துள்ளது.

சென்னை நகருக்கு காஞ்சீபுரம் மாவட்டத்தில் பனை மரங்கள் அதிகம் உள்ள கல்பாக்கம், வேடல், பெரியாநத்தம் உள்பட இடங்களில் இருந்து நுங்கு வரத்து இருக்கிறது.

தற்போது நுங்கு சீசன் ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால் 1 டஜன் நுங்கு(12 எண்ணிக்கை) ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நுங்கு வரத்து அதிகரித்தவுடன் விலை நிச்சயம் குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.  

Source: Dinathanthi

No comments:

Post a Comment