Monday 4 May 2015

காபி ஏற்றுமதி 7.22% அதிகரிப்பு


TamilDailyNews_8430401086808.jpg

புதுடெல்லி: நாட்டின் காபி ஏற்றுமதி கடந்த ஏப்ரல் மாதத்தில் 7.22 சதவீதம் அதிகரித்துள்ளதாக காபி வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த மாதத்தில்  இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 31,060 டன் காபி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே மாதத்தில் 28,966 டன் ஏற்றுமதி  ஆகியுள்ளது. இத்துடன் ஒப்பிடுகையில் 7.22 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஏற்றுமதி மதிப்பு ரூ.509.63 கோடி. அதாவது ஒரு டன் ரூ.1,64,078.56 அளவுக்கு மட்டுமே ஏற்றுமதியாகியுள்ளது. முந்தைய ஆண்டில் ஒரு டன்  ரூ.1,69,561.48 ஆக இருந்தது என்று காபி வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Source: Dinakaran

No comments:

Post a Comment