Tuesday 12 May 2015

சின்ன சின்ன செய்திகள்

Advertisement

பதிவு செய்த நாள்

13மே
2015 
00:00
கொடுக்காப்புளி: வெயிலையும், வெப்பத்தையும் விரும்பும் வித்தியாசமான பழமாக இருப்பது கொடுக்காப்புளி. உவட்டு பூமியிலும், உவர்நீரிலும் கூட வளரும் தன்மையுடையது. தமிழகத்தில் கொடுக்காப்புளியை கோணப்புளியங்காய் என்றும் அழைக்கின்றோம். கொடுக்காப்புளி கால்நடைகளுக்கு ஏற்ற தீவன மரம். இதன் தழைகள் வெள்ளாடுகளுக்கு பிரியமான தீனி. கொடுக்காப்புளி தரிசைத் தங்கமாக்கும் மரம். பல்வேறு சூழ்நிலைகளிலும் வளரக்கூடியது. மண் அரிமானம் ஏற்பட்டு வடிவம் இல்லாமல் கிடக்கும் பூமியைக்கூட சமன்படுத்தி நடலாம். மணல் பகுதிகள், தேரிகளிலும் நடலாம். கடலோர மணல் பகுதிகள், உவர் நிலங்கள், உதவாக்கரை பூமிகளிலும் வளர்ந்திருக்கும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஜூன் - ஜூலை அக்னி நட்சத்திர வெயிலின் கடுமை குறைந்த தருணம், அப்போது தென்மேற்கு பருவமழையும் ஆரம்பித்திருக்கும். இத்தருணத்தில் கன்றுகளை நடலாம். பி.கே.எம்.1 ரகம் தரத்தில் சிறந்தது. நல்ல சுவை உடையது. கொடுக்காப்புளியில் ஒட்டுக்கன்றுகள் கிடைக்குமிடம், ஏந்தல் நர்சரி கார்டன் - அருண் நாகராஜ், சாலைப்புதூர் (திண்டுக்கல் - வத்தலக்குண்டு ரோடு) திண்டுக்கல் மாவட்டம். அலைபேசி : 98421 34208, 98652 34208.
""கிஸ்ஸான் நர்சரி'', கண்ணையா சந்தூரி கிருஷ்ணகிரி மாவட்டம், அலைபேசி : 94434 81064. தோட்டக்கலைக்கல்லூரி, பெரியகுளம் - வத்தலக்குண்டு ரோடு, திண்டுக்கல் மாவட்டம். போன் : 04546 - 233 225, 231 726. தோட்டங்களில் பயிரிட 30ஙீ30 இடைவெளியில் ஏக்கருக்கு 48 கொட்டைக்கன்றுகள் நட்டு வளர்க்கலாம். ஊடு பயிராக வளர்ப்பதனால் 54ஙீ54 இடைவெளியில் ஏக்கருக்கு 15 கன்றுகளை மட்டும் நட்டு வளர்க்கலாம்.
ஓசோன் மூலம் பூச்சிகள் கட்டுப்பாடு : உளுந்து, பச்சைப்பயற்றில் பூச்சிகள், வண்டுகளைக் கட்டுப்படுத்த உணவு மற்றும் வேளாண் பதன் செய்யும் துறை, த.வே.ப.கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஓசோன் மூலம் பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியும் என்ற நுட்பம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஓசோன், ஆக்ஸிஜனின் மற்றொரு உருவம். இது தற்பொழுது தண்ணீரில் உள்ள பாக்டீரியாவை அழிக்கவும், மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் கருவிகளில் உள்ள கிருமிகளை அழிக்கவும், கழிவுநீர் சுத்திகரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
ஓசோன் வாயுவை கரோனா வெளியேற்றம் முறையில் ஓசோன் ஜெனரேட்டர் கொண்டு உற்பத்தி செய்யலாம். இந்த ஜெனரேட்டரில் ஆக்சிஜன் வாயு உள்ளே அனுப்பப்பட்டு ஓசோனாக மாற்றமடைந்து வெளியே வருகின்றது. இதை நாம் பயறு சேமிக்கும் கலன்களின் உள்ளே அனுப்பி பூச்சிகளை அழிக்கலாம். ஓசோன் தானாகவே 20 நிமிடங்களில் ஆக்சிஜன் மாறுவதால், சுற்றுப்புற சூழலோடு தீங்கு விளைவிப்பதில்லை. 500 பிபிஎம் செறிவு கொண்ட ஓசோன் பச்சைப்பயறில் உள்ள பூச்சிகளை அழிக்க 6 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது.
ஓசோன் வாயு மூலம், பயறுகளில் வரும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதால் இரசாயனத்தின் நச்சுத்தன்மையையும் தவிர்த்து, சுற்றுப்புற சூழலையும் பாதுகாக்கலாம். தகவல் : முனைவர் பா.பாண்டிச்செல்வம், முனைவர் வெ.திருப்பதி, முனைவர் ச.மோகன், உணவு மற்றும் வேளாண் பதனி செய்துறை, த.வே.ப.கழகம், கோயம்புத்தூர்-641 003. அலைபேசி : 0422 - 661 1268.
உழவர் உறுதுணை மையம் : Farmers Facility Centre, வேளாண்மைத் தொழில்நுட்ப தகவல் மையம், Agricultural Technology Information Centre - ஆகியவை உழவர்களுக்கு தேவையான உதவிகளையும் வழங்கி வருகின்றன.
மேலும் விபரங்களுக்கு : இயக்குநர், விரிவாக்கக் கல்வி இயக்ககம், த.வே.ப.கழகம், கோயம்புத்தூர்-641 003.
போன் : 0422 - 661 1219, 661 1315.


Source: Dinamalar

No comments:

Post a Comment