Monday 4 May 2015

இரண்டரை ஆண்டுகளில் காய்க்கும் 'பாலூர் பலா'


Tamil_News_large_1245388.jpg

திண்டுக்கல் :திண்டுக்கல் அருகே பலக்கனூத்து விவசாயி மணிவேல் தோட்டத்தில் இரண்டரை ஆண்டுகளில் காய்க்கும் 'பாலூர் --- பலா' விளைவிக்கப்
படுகிறது.இவ்வகை பலா மரங்கள் அதிகளவில் விழுப்புரம், கடலூர், ஆந்திராவில் விளைகின்றன. சாதாரணமாக பலா மரங்கள் 10 ஆண்டுகள் காய்க்கும். மேலும் பெரிய மரங்களாக இருப்பதால் பழங்களை பறிப்பதில் சிரமம் இருக்கும். ஆனால் 'பாலூர் 1 பலா' இரண்டரை ஆண்டுகளில் காய்க்க துவங்கும். தொடர்ந்து ஆண்டுதோறும் காய்க்கும். சிறிய மரமாக இருப்பதால் எளிதில் பழங்களை பறிக்கலாம். சுளை பெரிதாகவும், சுவையாகவும் இருக்கும்.மணிவேல் கூறுகையில், "சிறிய மரமாக இருப்பதால் பராமரிப்பது எளிது. நோய் தாக்குதல் குறைவாக உள்ளது. ஒரு மரத்தில் 20 முதல் 25 காய்கள் வரை காய்க்கும். ஒட்டுமுறையில் பலா கன்றுகளை உற்பத்தி செய்து, ரூ.100 க்கு விற்கிறோம்,” என்றார்.

No comments:

Post a Comment