Tuesday 26 May 2015

பயனற்ற நிலத்தில் பழ மர பூங்கா அமைக்க கோரிக்கை

குன்னுார் : 'குன்னுாரில் 2 ஏக்கர் பயனற்ற நிலத்தில், பழ மரங்களை கொண்ட பூங்கா அமைக்க வேண்டும்' என பழக்கண்காட்சியில் வலியுறுத்தப்பட்டது.
குன்னுார் சிம்ஸ் பூங்காவில் நடந்த பழக்கண்காட்சி நிறைவு விழாவில், நகராட்சி தலைவர் சரவணன் பேசுகையில், “நீலகிரி மாவட்டத்தில் எஸ்டேட்டுகள், பழ மரங்கள் அழிக்கப்பட்டு காட்டேஜ்களாக மாறி வருகிறது. வீட்டு தோட்டங்களுக்கு ஏற்றவாறு பழ மரங்களை ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்க வேண்டும். பழ மரங்களை அதிகளவில் நட்டு வளர்க்க குன்னுாரில் உழவர் சந்தை அருகே பயனற்ற வகையில் உள்ள இரண்டு ஏக்கர் நிலத்தில், பூங்கா அமைக்க வேண்டும்.'' என்றார். எம்.பி., அர்ஜுனன், கோபாலகிருஷ்ணன், மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநர் சீனிவாச ரெட்டி, மாவட்ட ஊராட்சி தலைவி மேனகா, நகராட்சி துணைத் தலைவர் மணி, குன்னுார் ஒன்றிய செயலாளர் ஹேம்சந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment