Monday 25 May 2015

வேளாண்மை திட்டப்பணிகளை அதிகாரிகள் ஆய்வு


ஓசூர் பகுதியில் வேளாண்மை திட்டப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

அதிகாரிகள் ஆய்வு 

வேளாண்மைத்துறையின் சென்னை அலுவலகத்தைச் சேர்ந்த கூடுதல் இயக்குனர் (மத்திய அரசு திட்டம்) ஷாஜ கான் மற்றும் துணை இயக் குனர் (மானாவரி பயிர்கள்) ஜார்ஜ் மேனன் ஆகியோர் ஓசூர் வந்தனர். அவர்கள் ஓசூர் அருகே உள்ள தொரப் பள்ளியில் விவசாயி ஆண்டி யப்பன் என்பவரின் நிலத்தில் களப்பணியாளர்களின் மண் மாதிரி சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2014-2015-ன் கீழ் 80 சதவீத மானியத்தில் வெங்கடா சலம் என்ற விவசாயிக்கு வழங்கப்பட்ட சோலார் பம்ப் செட் பயன்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் 2014-2015-ன் கீழ் 50 சதவீத மானியத்தில் விவசாயி வெங்கடேசப்பா என்பவருக்கு வழங்கப்பட்ட ரோட்டா வேட்டர் கருவியின் பயன்பாடு குறித்து ஆய்வு செய்தனர். 

தொழில்நுட்ப கையேடுகள் 

தேசிய நீடித்த நிலையான திட்டம் 2014-14-ன் கீழ் கெலமங்கலம் வட்டாரத்தில் உள்ள பெட்டமுகிலாளம், இயற்கை வேளாண்மை கிராம மாக தேர்வு செய்யப்பட்டது. இந்த கிராமத்தில் கூடுதல் இயக்குனர்(மத்திய அரசு திட்டம்) ஷாஜகான் முன் னிலையில் நடைபெற்ற தொடக்க விழாவில், இயற்கை பண்ணையம் குறித்து விவ சாயிகளுக்கு தொழில்நுட்ப கையேடுகள் வழங்கப் பட்டது. 

இந்த நிகழ்ச்சியில், பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் பேராசிரியர் புத்தர், முனைவர் சிவகுமார், ஆனந்த் மற்றும் முனைவர் கிருஷ்ணவேணி, எலுமிச்சியங்கிரி வேளாண் அறிவியல் மைய முனைவர் குணசேகரன், சேகர்ஆகியோர் கலந்து கொண்டு தொழில் நுட்பம் குறித்து பேசினார் கள். 

ஆய்வுக் கூட்டம் 

விழாவின் ஒரு பகுதியாக, மண்புழு உரம் தயாரித்தல் குறித்து ராஜேந்திரன் என்ற பயனாளியின் வயலிலும், தென்னை நார் கழிவிலிருந்து உரம் தயாரித்தல் குறித்து மாதேவ் என்பவரது வயலிலும், வல்லுநர்களால் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப் பட்டது. பின்னர் கிருஷ்ணகிரி வேளாண்மை இணை இயக் குனர் அலுவலகத்தில் நடந்த அனைத்து நிலை அலுவலர்கள் ஆய்வுக் கூட்டத்தில் வேளாண்மை கூடுதல் இயக் குனர் ஷாஜகான் கலந்து கொண்டு மண் மாதிரி சேகரிப்பு, ஆதார் எண் இணைப்பு, மென்பொருள் பட்டியல் இடுதல் மற்றும் விதைகள், உரங்கள் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். மேலும், அரசு திட்டத்தில் எவ்வித குறைபாடுமின்றி அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க உரிய நடவடிக்கையும், திட்டங்களை விரைந்து முடித் திட அறிவுரைகளும் கூட்டத் தில் வழங்கப்பட்டது. மேற் கண்ட தகவல்களை, கிருஷ்ண கிரி வேளாண்மை இணை இயக்குனர் சபா நடேசன் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள் ளார். 

No comments:

Post a Comment