Wednesday 6 May 2015

பூத்துக் குலுங்கும் சணப்பை பூக்கள்:

இயற்கை உரத்​துக்​காக வேதா​ரண்​யம் பகுதி நெல் தரி​சில் சாகு​படி செய்​யப்​பட்​டுள்ள சணப்பை பயிர்​கள் தற்​போது பூத்​துக் குலுங்​கு​கின்​றன.​
சணல் என்று அழைக்​கப்​ப​டும் சணப்பை பயிர் விவ​சா​யத்​துக்கு மிகச் சிறந்த இயற்கை உர​மா​கப் பய​ன​ளிக்​கி​றது.​ இதன் வேர் முடிச்​சு​கள் மூலம் கிடைக்​கும் உயிர்ச் சத்​து​கள் மண்ணை வள​மாக்கி,​பயிர்​க​ளுக்கு ஊக்​க​ம​ளிக்​கி​றது.​
இந்​தப் பயி​ரின் தண்டி​லி​ருந்து கிடைக்​கும் பஞ்​சில் ​(இழை)​ கயிறு போன்​றவை தயா​ரிக்​கப்​ப​டு​கின்​றன.​
நெல் சாகு​ப​டிக்கு முன்​ன​தாக சணல் பயி​ரி​டப்​பட்டு,​​ பூப்​ப​தற்கு முன்​பா​கவே வய​லில் அவற்றை மடக்கி உழவு செய்து பசுந்​தாள் உர​மாக விவ​சா​யி​கள் பயன்​ப​டுத்​துக்​கின்​ற​னர்.​ ​ மானா​வாரி நிலப்​ப​ரப்​பான வேதா​ரண்​யம் பகு​தி​யில் தகட்​டூர்,​பஞ்​ச​ந​திக்​கு​ளம்,​மரு​தூர்,​​ ஆயக்​கா​ரன்​பு​லம் போன்ற கிரா​மங்​க​ளில் விவ​சா​யி​கள் சணப்​பையை பசுந்​தாள் உர​மா​க​வும்,​மறு உற்​பத்​திக்​காக விதை​க​ளைச் சேக​ரிக்​க​வும் சாகு​படி செய்​துள்​ள​னர்.​ அவை தற்​போது மஞ்​சள் நிறத்​தில் பூத்​துக் குலுங்​கு​கின்​றன.​ கொத்​துக் கொத்​தாக காணப்​ப​டும் பூக்​க​ளும்,​அதன் காய்​கள் முற்​றிய பின்​னர் காற்​றில் அசை​யும்​போது ஏற்​ப​டும் ஒரு​வித ஓசை​யும் காண்​போரை ஈர்க்​கின்​றன.​

No comments:

Post a Comment