Monday 1 June 2015

கோடை உழவு செய்தால் மழைநீர் வீணாகாது : வேளாண் குறைதீர் கூட்டத்தில் அறிவுரை

கரூர்: கோடை உழவு செய்தால் மழைநீர் வீணாகாமல், நிலத்தில் சேமிக்கலாம், என வேளாண்மை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கரூர் கலெக்டர் அலுவலகத்தில், வேளாண் குறைத்தீர்க்கும் கூட்டம் நடந்தது. அதில், வேளாண்மை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
கரூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை, 652.2 மி.மீ., இதில், கோடை பருவத்தில் சராசரி மழையான 109.5 மி.மீ.,க்கு, 226.3 பதிலாக மி.மீ., மழை கிடைத்துள்ளது. மழையை பயன்படுத்தி, விவசாயிகள் கோடை உழவு செய்யலாம். கோடை உழவு செய்வதால், மழைநீர் ஓடி வீணாகாமல் அந்த நிலத்திலேயே சேமிக்கப்படுகிறது. மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. மண்ணுக்குள் இருக்கும் கூட்டு புழுக்கள் அழிக்கப்படுகின்றன. தென்மேற்கு பருவ மழை காலத்தில் பெய்யும் மழையை கொண்டு, மானாவாரி பயிர்களை சாகுபடி மேற்கொண்டு பயனடைலாம்.
கோடை உழவுப் பணிக்கு, வேளாண்மை பொறியியல் துறை மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், வேளாண் கருவிகள் விவசாயிகளுக்கு வாடகைக்கு விடுவதற்காக, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வேளாண் பொறியல் துறையில் உழவு இயந்திரம் வாடகையாக மணிக்கு, 340 ரூபாய், மண் தள்ளும் இயந்திரம் மணிக்கு, 840 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் வாடகைத் தொகையை முன் கூட்டியே செலுத்தி, பெயரை பதிவு செய்யலாம். காரீப் பருவத்துக்கு தேவைப்படும் நெல் விதைகள், 170 மெட்ரிக் டன் சிறு தானிய பயிர் விதைகள், 2.5 மெட்ரிக் டன், பயறு வகை பயிர்களின் விதைகள், 27 மெட்ரிக் டன், எண்ணெய் வித்து விதைகள், 67 மெட்ரிக் டன் அளவுக்கு அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் இருப்பில் உள்ளது. விதைகள் தேவைப்படும் விவசாயிகள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி பயன் பெறலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Source : Dhinamalar

No comments:

Post a Comment