Wednesday 3 June 2015

எள் சாகுபடி அதிகரிக்க விவசாயிகளுக்கு ஆலோசனை: வேளாண் வல்லுநர்

அரியலூர் மாவட்டத்தில் சாம்பல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தி, எள் சாகுபடி அதிகரிக்க ஆலோசனை தெரிவித்துள்ளார் சோழமாதேவி வேளாண் அறிவியல் மைய தொழில் நுட்ப வல்லுநர் ராஜா ஜோஸ்லின்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
அரியலூர் மாவட்டத்தில் 2,220 ஏக்கர் பரப்பளவில் எள் சாகுபடி பயிரிடப்பட்டு வருகிறது. இதில்,மாசி பட்டத்தில் டி.எம்.வி 3,4,6,கோ 1,வி.ஆர்.ஐ 1 ஆகிய ரகங்களை விவசாயிகள் பயிரிட்டனர். இந்நிலையில், எள் சாகுபடியில் தற்போது பூக்கள் பூத்துக் காய்கள் தென்பட ஆரம்பித்துள்ளது. இதனிடையே, அண்மையில் பெய்த தொடர்
மழையால் பல்வேறு நோய் மற்றும் பூச்சித் தாக்குதலால் எள் மகசூல் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது.
இதைக் கட்டுப்படுத்த,வயலில் முந்தைய பயிரின் கழிவுகளை அறவே நீக்கி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும், ஊடுபயிராக கம்பு (3:1) என்ற விகிதத்தில் பயிரிடலாம். கரையும் கந்தகத்தை 2 கிராம் தண்ணீரை 10 நாள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்கவும்.

இதனால்,காய்கள் மற்றும் தண்டு பாகங்கள் பழுப்பு நிறமாக மாறும். மேற்கண்ட அறிகுறிகள் தென்படும்போது அறுவடை செய்து விட வேண்டும். தவறினால், காய்கள் வெடித்து சிதறி மகசூல் இழப்பு ஏற்படும். எனவே, விவசாயிகள் மேற்கண்ட முறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் எள் சாகுபடியில் அதிக மகசூல் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : Dhinamani

No comments:

Post a Comment