Thursday 4 June 2015

உளுந்து விதைகள் பரிசோதனை வேளாண் அதிகாரி அறிவுரை

வாலாஜாபாத்: 'ஆனி மற்றும் ஆடி பட்டத்தில், உளுந்து விதைக்கும் விவசாயிகள், விதைகளை பரிசோதனை செய்து கொள்ளலாம்' என, விதை பரிசோதனை அலுவலர் தெரிவித்து உள்ளார்.
விதை பரிசோதனை அலுவலர் பெருமாள் கூறியதாவது: ஆனி மற்றும் ஆடி பட்டத்தில் மானாவாரி மற்றும் இறவை உளுந்து பயிர் செய்வதற்கு ஏற்ற பருவமாகும். உளுந்து விதைகள் பொதுவாக, 75 சதவீதம் முளைப்பு திறனும்; 8 சதவீதம் ஈரப்பதமும் இருக்க வேண்டியது அவசியம்.
இதில், வம்பன் 2 முதல் 7 வரையில் உள்ள விதைகள் அதிக முளைப்பு திறன் உடையவை.
நிலத்தில், 30 செ.மீ., இடைவெளி விட்டு விதைத்தால், சராசரியை விட, 20 சதவீதம் கூடுதல் மகசூல் பெறலாம். சரியான உளுந்து விதைகளை, 75 சதவீதம் முளைப்பு திறன் உள்ளதா என, பரிசோதனை செய்வது அவசியம். இதற்காக, 100 கிராம் எடையுள்ள உளுந்து விதைகளை, காஞ்சிபுரம் விதை பரிசோதனை நிலையத்தில், நேரிலோ அல்லது தபாலிலோ, 30 ரூபாய் கட்டணம் செலுத்தி, பரிசோதனை செய்து கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Source : Dhinamalar

No comments:

Post a Comment