Wednesday 3 June 2015

நம்பியூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானியத்தில் இயந்திரங்கள்


தரங்கம்பாடி, :  கோடை உழவு செய்தால் விதைமுளைப்புத்திறன் அதிகமாவதுடன் அதிக மகசூல் பெறலாம் என்று செம்பனார்கோவில் வேளாண்மை உதவி இயக்குனர் யோசனை தெரிவித்துள்ளார்.நாகை மாவட்டம் செம்பனார்கோவில் வேளாண் உதவி இயக்குனர் வெற்றிவேலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோடை உழவினால் கடின மண்நயம் கொண்ட களிவாகு, வண்டல் களிவாகு போன்ற நிலங்களில் ஏற்படும் நிலவெடிப்பு தவிர்க்கப்படும். மேலும் மண்ணின் ஈரப்பதம் ஆவியாகி விரயமாகாமல் காக்கப்படும். மண் வெடிப்பு தகர்க்கப்படுவதால் கோடை நீர் பாய்ச்சும்போது அதிகம் தண்ணீர் விரயம் ஆகாது. நடவுக்கும் நாற்றாங்காலுக்கும் செய்யப்படும் ஆரம்ப கட்ட உழவு சுலபமாகும்.

மண்ணின் நயமும் கட்டிகள் அமைப்பும் உடைக்கப்பட்டு மண்ணின் பௌதீக வளம் சீர் செய்யப்படுகிறது. மேல் மண் பொலபொல என ஆக்கப்படுவதால் விதை முளைப்புத்திறன் அதிகரிப்பதுடன் பயிரின் மகசூலும் கூடுதலாக கிடைக்கும். மண்ணின் நீர்பிடிப்பு தன்மை அதிகரிக்கப்படும். மண்ணில் உள்ள கூட்டுப் பொருட்கள் வெளியே கொண்டுவரப்பட்டு அவை இறந்துவிட வாய்ப்புள்ளது. களைகள் ஆரம்ப கட்டத்திலேயே அளிக்கப்படுகின்றன. மண்ணின் காற்றோட்டம் அதிகரிக்கப்படுவதால் பயிர் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும். மண்ணில் அங்கக பொருட்கள் மண்ணிலே மடிக்கப்படுவதால் மண்ணில் அங்கக வளம் கூடும். எனவே விவசாயிகள் கோடை உழவில் ஈடுபட வேண்டும். மணல் சாரி நிலங்கள், ஆற்றுப்படுகை நிலங்கள், களர், உவர் நிலங்களுக்கு கோடை உழவு ஏற்புடையதாக இருக்காது.  இவ்வாறு வேளாண் அதிகாரி வெற்றிவேலன் தெரிவித்துள்ளார்.

Source : Dhinakaran

No comments:

Post a Comment