Thursday 4 June 2015

வீட்டுத் தோட்ட பராமரிப்புப் பயிற்சி

கிள்ளிக்குளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கி வரும் பாளையங்கோட்டை வேளாண் உதவி மையத்தில் வீட்டுத் தோட்டம் பராமரிப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.
வேளாண் உதவி மைய உதவி பேராசிரியர் சி. ராஜாபாபு வரவேற்றார். வீட்டுத் தோட்டத்தின் அவசியம் என்ற தலைப்பில் தோட்டக்கலைத் துறை பேராசிரியர் விஜிலியன் ஹாரிஸ் பேசினார். காய்கனி சாகுபடியில் உள்ள நவீன தொழில்நுட்பங்கள், கத்தரி, வெண்டை, மிளகாய், தக்காளி, கீரை வகைகள், மா, கொய்யா, பலா போன்ற பழ வகைகள், மல்லி பிச்சி, முல்லை, ரோஜா, கனகாமரம் போன்ற பூ செடிகளில் உள்ள நுண்ணூட்ட சத்துக் குறைவுக்கான அறிகுறிகள், கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பயிற்சியில் பங்கேற்றோருக்கு விளக்கப்பட்டது. செயல்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டது. பயிற்சியின் முடிவில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Source : Dhinamani

No comments:

Post a Comment