Friday 3 July 2015

ஜூலை 7-இல் மஞ்சள் சாகுபடி தொழில்நுட்பம் குறித்த இலவச பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 7 ஆம் தேதி காலை 9 மணிக்கு மஞ்சள் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த ஒருநாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது.
இதுகுறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இப் பயிற்சியில் மஞ்சளில் உள்ள புதிய மேம்படுத்தப்பட்ட ரகங்கள், அதன் சிறப்பியல்புகள், விதையளவு, விதை நேர்த்தி, நடவு முறை, உர மேலாண்மை, நீர்ப் பாசனம், களை நிர்வாகம், பூச்சி மற்றும் நோய் நிர்வாகம், துல்லிய பண்ணை முறையில் மஞ்சள் சாகுபடி முறைகள் மற்றும் விதைக் கிழங்குகளை சேமிக்கும் முறை பற்றிய விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளன.
இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்துக்கு நேரில் வந்தோ அல்லது 04286 266345, 266244 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொண்டு 6ஆம் தேதிக்குள் பெயர் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
Source : Dhinamani

No comments:

Post a Comment