Monday 20 April 2015

தென்னைக்கும் பயிர்க்காப்பீடு செய்யலாம்

சிவகங்கை மாவட்டத்தில் தென்னை விவசாயம் செய்பவர்களும் பயிர்க் காப்பீடு செய்யலாம் என வேளாண் இணை இயக்குநர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சிவகங்கை மாவட்டத்தில் 8,600 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கோடைகாலத்தில் ஏற்படும் வறட்சியினால் தென்னை மரம் பாதிப்பு அடைய வாய்ப்புள்ளதால், விவசாயிகள் காப்பீடு செய்து பயன்பெறலாம். ஒரு ஆண்டு முதல் 15 ஆண்டுகள் வரை உள்ள ஒரு மரத்திற்கு மொத்த பிரிமியம் தொகை ரூ.9 இல் அரசு மானியம் போக ரூ.2.25 செலுத்தினால் போதும். 16 ஆண்டுகள் முதல் 60 ஆண்டுகள் வரை உள்ள ஒரு மரத்திற்கு மொத்த பிரிமியத் தொகை ரூ.14 இல் அரசு மானியம் போக ரூ.3.50 செலுத்தி காப்பீடு செய்து பயன்பெறலாம்.
காப்பீடு செய்த ஒரு ஆண்டு காலத்திற்குள் பாதிப்பு ஏற்பட்டால் பயிர் இழப்பீட்டு தொகை பெறலாம். ஒரு ஏக்கருக்கு 70 மரங்கள் வரை காப்பீடு செய்யலாம். காப்பீடு செய்வதற்கு கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல் சான்று பெற்று சம்மந்தப்பட்ட வட்டார வோளாண் உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு காப்பீடு செய்யலாம், என தெரிவித்துள்ளார்.

Source:
Dinamani
 

No comments:

Post a Comment