Sunday 29 March 2015

அவுரி பயிரிட்டு வறட்சியை சமாளிப்பு! வாழ்வாதாரத்தை காக்க முயற்சி

கள்ளிக்குடி : கள்ளிக்குடி பகுதியில் சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்து வருவதால் மானாவாரியான அவுரியை பயிரிட்டு விவசாயிகள் வறட்சியை சமாளித்து வருகின்றனர்.

கள்ளிக்குடியை சுற்றியுள்ள கிராமங்களில் கண்மாய் மற்றும் குளங்கள் வற்றி கால்நடைகளுக்கு கூட குடிக்க தண்ணீர் இல்லை. சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையை நம்பி விவசாய பணிகளை துவங்கிய விவசாயிகள் பாதியில் அதை விட்டனர். இதனால் தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட பல பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து அழுகும் நிலை ஏற்பட்டது. வாழ்வாதாரத்தை தக்கவைக்க சிவரக்கோட்டை, கரிசல்காலன்பட்டி போன்ற கிராமங்களில் விவசாயிகள் அவுரி, நித்தியகல்யாணி செடிகளை பயிரிட்டுள்ளனர்.
விவசாயி ராமகிருஷ்ணன் கூறியதாவது: சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையில் 30 ஏக்கரில் அவுரி மற்றும் நித்திய கல்யாணி பயரிட்டேன். மானாவாரி பயிரான இவைகளுக்கு தண்ணீர் பாய்ச்ச தேவையில்லை. ஆறு மாதங்களில் செடிகள் வளர்ந்து பூக்கள் பூக்கத் துவங்கும். அதன்பின் செடிகளை பறித்து காயவைத்து உலர்த்திய பின், மொத்தமாக துாத்துக்குடிக்கு அனுப்பி விடுவோம். அவுரியை செடியாக போட்டால் கிலோ ரூ.35 வரை விலை போகும். இலைகளை மட்டும் தனியாக பிரித்து அனுப்பினால் கிலோவிற்கு ரூ.100 கிடைக்கும். நித்தியகல்யாணி கிலோ ரூ.20 வரை விலை போகிறது என்றார்.

Source: 

“Prevent dumping of unproductive soil in agriculture lands”

Participants at a rally in Nagercoil on Sunday.
Participants at a rally in Nagercoil on Sunday.
Green Movement, formed by various organisations, has urged the government to stop dumping of unproductive soil with alkaline content from the neighbouring Tirunelveli for commercial purposes to save fertile wetlands in Kanyakumari district.
Addressing a rally here on Sunday, its convenor R.S. Lal Mohan said the soil high in alkaline content was being dumped in some villages under Vadaseri and Putheri panchayats in Agasteeswaram taluk. Dumping of unproductive soil in fertile lands was being done mostly during night hours with the knowledge of the officials and village panchayat members, he alleged. The samples taken in a wetland where unproductive soil had been dumped showed that alkaline content was Ph 8.8 with very less potassium (35.5), phosphorous (1.11) and nitrogen (9.3) with high carbonate. He said the practice posed a serious ecological threat. It would spoil the quality of drinking water sources in the district.
“The alkaline water will seep into the groundwater during the rainy season. Intake of alkaline hard water can cause many diseases in humans like formation of kidney stone,” he added.
The rally began near Anna Statue in Vadaseri and ended near Putheri ROB.
People from all walks of life, including Chairman of Irrigation Wing of the Public Works Department Vins Antro, advocate and president of Nagercoil Welfare Society Ahmed Khan, co-convenor of INTACH Smithra Raghuvaran, S.P. Udhayakumar of People’s Movement Against Nuclear Energy (PMANE), district secretary of the CPI (ML) S.M. Anthony Muthu, office-bearers of the DMK and the Aam Aadmi Party, participated.

Source: 

Training in Vannamei farming

Pathogen-free Vannamei shrimp farming tended to be a lucrative venture for entrepreneurs. This shrimp variety contributed much to seafood exports. Though its production witnessed an increasing trend, its off-take had reduced slightly.
To overcome the problem of cost of production, a training programme was organised on profitable Vannamei farming, G. Sugumar, Dean (in-charge), Fisheries College and Research Institute, Tuticorin, said on Sunday. Shrimp farms are flourishing from Nagapattinam to Ramanathapuram along the East-Coast and also in parts of Tuticorin.

Tuesday 24 March 2015

அலங்கார மீன் வளர்க்க மத்திய அரசு தரும் அருமையான வாய்ப்புகள்

பதிவு செய்த நாள்

25மார்
2015 
00:00
மீன் வளர்க்கவும், மீன் பிடிக்கவும், பதப்படுத்தி ஏற்றுமதி செய்யவும், பயிற்சி, கடனுதவி, மானியம் வழங்கி வந்த இந்திய அரசின் ""கடல் பொருள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம்'' இன்று அலங்கார மீன் வளர்க்கவும் மார்க்கெட் செய்யவும் ஏராளமான உதவிகள் செய்து வருகிறது.
அலங்கார மீன் வளர்ப்பில் கிராமப்புறங்களில் ஏராளமான வேலை வாய்ப்புக்களை உருவாக்குகிறது. அலங்கார மீன் வளர்ப்போர், மார்க்கெட்டிங் கூட்டுறவு சங்கங்களுக்கு கட்டிடம், இதர பொருட்கள் வாங்க நிதி உதவி. உற்பத்தி, மார்க்கெட்டிங் மற்றும் ஏற்றுமதிக்கு உதவுதல் ஆகிய பணிகளை செய்கிறது.
வருடத்திற்கு 60000 மீன் உற்பத்தி செய்வோருக்கு ரூ.75000, 1,60,000 மீன் உற்பத்தி செய்வோருக்கு ரூ.2 லட்சம் மற்றும் வருடத்திற்கு 5 லட்சம் மீன் உற்பத்தி செய்வோருக்கு ரூ.7.5 லட்சம், கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.5 லட்சமும் நிதி உதவி அளிக்கப்படும்.
சிமென்ட், தண்ணீர் தொட்டி, கண்ணாடித்தொட்டி, தண்ணீர் சுத்தம் செய்யும் கருவிகள் போன்றவற்றுக்கு வழங்கப்படும். தமிழ்நாடு அரசிடம் பதிவு பெற்ற ""அலங்கார மீன் வளர்ப்போர் கூட்டுறவு சங்கங்களுக்கு'' ஏற்றுமதி செய்ய, மார்க்கெட் செய்ய நிதி உதவி வழங்கப்படும். ஆனால் இண்டர்நேஷனல் விமான நிலையத்தில் இருந்து 30 கி.மீ தொலைவுக்குள் ஏற்றுமதியாளர் இருக்க வேண்டும்.
இத்திட்டம் பற்றியும், இந்திய அரசு கடல் பொருள்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்க கொண்டு வந்துள்ள அனைத்து திட்டங்களையும் பற்றி அறிந்து கொள்ள உதவி இயக்குநர் (அலங்கார மீன் வளர்ச்சித் துறை) கடல் பொருள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம், MPEDA House, Panampally Avenue, Kochi682 036, Kerala. Ph: 0484 231 197. email: mpeda@mpeda.nic.in., www.mpeda.com.
கிளை : துணை இயக்குநர், MPEDA, AH25, 4வது தெரு, 
8வது மெயின் ரோடு, சாந்தி காலனி, அண்ணா நகர், 
சென்னை-40. போன்: 044 - 2626 9192. email : chempeda.vsnl.net.
எம்.ஞானசேகர்,
தொழில் மற்றும் விவசாய ஆலோசகர்
93807 55629.

Source: 

சின்ன சின்ன செய்திகள்

பதிவு செய்த நாள்

25மார்
2015 
00:00
சப்போட்டாவை பழுக்க வைத்தல்: சப்போட்டா பழங்கள் பூத்ததிலிருந்து 4-5 மாதங்களில் அறுவடைக்கு வரும் சப்போட்டாவின் காய்கள் முதிர்ச்சி அடைந்ததை அறிந்து கொள்ள தோலில் எந்த மாற்றங்களும் ஏற்படுவதில்லை. முதிர்ச்சி அடைந்த காய்கள் ஓரிரு மாற்றங்களைக் கொண்டு முதிர்ச்சி அடைந்த நிலை எனக் கண்டறிந்து பறிக்கப்படுவது பழக்கத்தில் உள்ளது.
சப்போட்டா பறித்தவுடன் பழமாக உண்ணும் நிலையில் இருப்பதில்லை. காலை நேரத்தில் சப்போட்டா காய்களில் அதிகமாகப் பால் இருப்பதால் (Latex) பிற்பகலில் பறித்து பழுக்க வைப்பது சிறந்தது. பறித்தவுடன் காய்களின் காம்பிலிருந்து பால் வடியும். காய்களை அதிகப்பாலுடன் பழுக்க வைத்தால் சரிவர பழுக்காமல் சேதமேற்படும். ஆகவே பறித்த காய்களை சாக்குபடுதாவின் மேல் பரப்பி இளம் வெயிலில் அரைமணி நேரம் வைத்தால் காய்களில் உள்ள பால் குறைந்து விடும். சிறிதளவு காயவைத்த காய்களை வைக்கோல் பரப்பிய மூங்கில் கூடைகளில் அடுக்கி கூடையின் மேல் பகுதியை மூங்கில்தட்டி அல்லது சாக்குப்பை பயன்படுத்தி இருக்கமாக மூடிவிடவேண்டும். கூடையிலுள்ள காய்கள் 3-4 தினங்களில் பழுத்து நுகர்வோருக்கு விற்பனை செய்யக்கூடிய பழமாக இருக்கும் சப்போட்டா பழுத்தபின் ஓரிரு நாட்களே உண்பதற்கான நிலையில் இருக்கும். பிறகு சுவை குன்றி அழுகி விடும்.
பழுத்த பழங்களை குளிர்சாதனை அறைகளில் 0 டிகிரி சென்டி கிரேடு முதல் 1.7 டிகிரி உள்ள சீதோஷ்ண நிலையில் 2 முதல் 4 வாரம் வரை நல்ல முறையில் வைத்திருந்து விற்பனை செய்ய முடியும்.

புதிய கோழி ரகங்கள்: ஐதராபாத்தில் உள்ள கோழி திட்ட இயக்குனரகம் "கிராமப்பிரியா' (முட்டை ரகம்), "வனராஜா' (முட்டை மற்றும் இறைச்சி ரகம்) ஆகிய கோழி ரகங்களை உருவாக்கி உள்ளது. இவை பார்ப்பதற்கு நாட்டுக்கோழிகளைப் போல இருக்கும். அதிக எண்ணிக்கையில் முட்டையை இடக் கூடியவை. முதலில் இந்த குஞ்சுகள் தடுப்பூசி மற்றும் உரிய தீவனங்களுடன் அடைக்காலங்களில் 6 வார காலம் தொடர் செயற்கை வெப்பத்தில் பராமரிக்கப்படுகிறது. பின்பு தான் விவசாயிகளுக்கு கோழிக் குஞ்சுகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் அதிக எடையையும், அதிக முட்டையிடும் திறனையும் கோழிகள் பெறுகின்றன. அதாவது 1.5 ஆண்டில் "கிராமப்பிரியா' ரகக்கோழி 200 முதல் 230 முட்டைகளும், "வனராஜா' ரகக்கோழி 100 முதல் 110 முட்டைகளும் கொடுக்கின்றன. கோழிகளின் எடையும் 2.2 கிலோ வரை இருக்கிறது.
இந்த இரண்டு கோழி இனங்களும் கோழி விதைத் திட்டத்தின் கீழ் தமிழக விவசாயிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் தமிழ்நாட்டில் உள்ள கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்கள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளன. இவை இரண்டும் பறக்கடையில் வளர்க்கவே வழங்கப்படுகின்றன. கோயம்புத்தூர் மண்டலத்துக்குட்பட்ட ஈரோடு, சேலம், நீலகிரி, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கால்நடைப்பயிற்சி மையத்தில் இதற்கான முன்பதிவைச் செய்து கொள்ளலாம்.
மேலும் பத்து கால்நடை மருத்துவ அறிவியல், பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்களிலும் இந்தக் கோழிக்குஞ்சுகளுக்கான முன்பதிவைச் செய்து பெற்றுக் கொள்ளலாம். தொடர்புக்கு : இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கோயம்புத்தூர்-0422 - 266 9965.
வெண்டை ஹைபிரிடு OH.102 - வெள்ளை விழாத அதிக மகசூல் கொடுக்கக்கூடிய கோடைக்கு ஏற்ற வெண்டை ஹைபிரிடு பற்றிய விபரங்களுக்கு தொடர்பு முகவரி: Synqenta India Ltd. சரக அலுவலர்கள் - தேனி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி, ராமநாதபுரம்- 95007 08707; சேலம், தர்மபுரி, நாமக்கல் - 94422 14885; திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர் - 85086 37849.
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

Source: 

கொடி அவரையில் கோடி லாபம்

பதிவு செய்த நாள்

25மார்
2015 
00:00
மலைப்பிரதேசங்களில் காப்பி, தேயிலை, ஏலக்காய் போன்றவற்றை பயிரிட்டால் நல்ல லாபம் ஈட்ட முடியும் என்ற கண்ணோட்டம் விவசாயிகளிடம் இருந்தது. அது படிப்படியாக மாறி வருகிறது. தற்போது மண்ணின் தன்மைக்கு ஏற்ப புதுப்புது ரகங்களை பயிரிட்டு மலை விவசாயிகள் சாதனை படைத்து வருவது பாராட்டுக்குரியது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலையில் காப்பி, ஏலக்காய் விவசாயத்தை அடுத்து தோட்டக்கலைத்துறை பரிந்துரைத்துள்ள காரட், பீன்ஸ், நூக்கல், பீட்ரூட், முட்டைகோஸ், முள்ளங்கி, பீன்ஸ் வகைகள் விளைவிக்கின்றனர். இவை விவசாயிகளுக்கு லாபத்தை ஈட்டித்தருகின்றன.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை, தென்மலை பகுதிகளில் சவ் சவ்வை அடுத்து கொடி அவரை விவசாயத்தில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர். கொத்துக்கொத்தாக... நீளமாக காய்க்கும் மலைக்கொடி அவரையின் ருசியே அலாதி தான்.
தென்மலை விவசாயி வி.எஸ்.பழனியாண்டி கூறியதாவது: ஆண்டு தோறும் நவம்பர் இறுதி வாரம் அல்லது டிசம்பர் துவக்கத்தில் கொடி அவரை பயிரிடுவோம். மூன்று மாதங்களில் காய்கள் பறிக்கலாம். இங்குள்ள மண்ணின் காரத்தன்மைக்கு சவ்சவ் நன்றாக விளையும். ஆனால் கொடி அவரை விளையுமா என துவக்கத்தில் சந்தேகம் இருந்தது. 
எனினும் ஒரு ஏக்கரில் பயிரிட்டதில் நன்றாக காய்த்தது. ஏக்கருக்கு ரூ.ஒரு லட்சம் கிடைத்தது. டீசல் பம்புசெட் மூலம் கிணற்று நீர் எடுத்து பயிர்களுக்கு பாய்ச்சுகிறேன். உரம், பூச்சிக்கொல்லி மருந்து, கூலி ஆட்கள், டீசல் செலவை கணக்கிட்டால் ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் மட்டுமே லாபம் கிடைக்கிறது. 
தற்போது ஐந்து ஏக்கரில் கொடி அவரை பயிரிட்டுள்ளேன். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். கிணற்றில் தண்ணீர் ஊறி கொண்டே இருந்தால் கொடி அவரையில் கோடி ரூபாய் லாபம் பார்க்கலாம் என்றார். 
மேலும் விபரமறிய 93803 96873ல் ஹலோ சொல்லலாம்.
-கா.சுப்பிரமணியன், மதுரை

Source: 

Call for holistic development of agri sector

: KAU Vice-Chancellor P. Rajendran called upon the Krishi Vigyan Kendra scientists to prepare projects for the holistic development of the agricultural sector.
Speaking at the inauguration of the two-day workshop on the formulation of an action plan for 2015-16 of Krishi Vigyan Kendras in Kerala and Lakshadweep at the Directorate of Extension, Kerala Agricultural University (KAU), on Tuesday, he asked KVK scientists to restructure extension modules without compromising on the focus and objectives.
“All extension programmes should aim at holistic development of farming sector. There has to be a change in extension perspectives in tune with emerging trends in agriculture and prospective plans have to be appropriately moulded. Soil nutrient management, agri entrepreneurship development, skill development, thrust on organic farming and credit and market support systems are the areas to be focused. Technology dissemination has to match the technology generation in quality and quantity,” Dr. Rajendran said.
The major issues discussed on the first day include integrated pest and disease management in different crops, correction of soil acidity and micro nutrient deficiency, column method of pepper propagation, performance assessment of varieties suited to different situations, wild boar management using repellents and value addition and marketing approaches involving self-help groups.
The annual workshop organised by ICAR Zonal Project Directorate in collaboration with the KAU.

Source: 

Credit plan envisages higher outlay for agricultural and micro industries

Focus on creation of assets

District Collector Archana Patnaik releasing Coimbatore District’s Annual Credit Plan for 2015-16 on Tuesday. S. Suresh Kumar (second right), General Manager, Canara Bank, receives the first copy. —Photo: K. Ananthan
District Collector Archana Patnaik releasing Coimbatore District’s Annual Credit Plan for 2015-16 on Tuesday. S. Suresh Kumar (second right), General Manager, Canara Bank, receives the first copy. —Photo: K. Ananthan
The credit outlay proposed for agriculture and allied activities in the district during the next financial year (2015-2016) has been increased by 18.24 per cent to Rs. 5,127 crore and to the micro and small-scale sector it is expected to go up by almost 20 per cent to Rs. 5,028 crore.
District Collector Archana Patnaik released the annual credit plan for the district here on Tuesday. According to the plan, the district has potential in horticulture crops such as cut flowers, agri bio-tech projects, green houses, etc. There is also potential for development of allied infrastructure such as cold storage, rural godowns and, wasteland development, minor irrigation projects, and food processing. The focus will be on creation of assets (investment and development loans).
The outlay for the sector for the current year (2014-2015) is Rs. 4,336 crore. The lending has been mostly to crop loan, including coconut, sugarcane, banana and also jewel loan for farming activities.
In the case of micro and small-scale sector, the outlay has been increased by 20.63 per cent to Rs. 5,028 crore as against Rs. 4,168 crore this year.
The Central Government is focusing on this sector now. The credit plan for agriculture and allied activities and micro and small-scale sectors is slightly more than that proposed in the potential-linked credit plan.
Since 2001-2002 to 2013-2014, total annual lending had been higher than that proposed in the annual credit plan in the district.
For the next fiscal, the total credit outlay proposed is Rs. 12,150 crore, which is over 1,900 crore more than that for the current financial year (Rs. 10,226 crore).
Between April and December 2014, the banks in the district had lent Rs. 7,980 crore.
The district will achieve the proposed credit outlay by the end of this month, says the district lead bank manager K. Krishnamoorthi.
Other priority sectors provide the required backward and forward linkages to the agriculture and micro-industries and hence, the outlay for this will be up by 15.85 per cent next year at Rs. 1,995 crore.
Releasing the document, the District Collector said that the district has the highest annual credit plan in the State and it is also leading in implementation of several schemes of the Government.
S. Suresh Kumar, General Manager of Canara Bank – Coimbatore Circle, and V. Saravanan, assistant general manager of Reserve Bank of India (Chennai), received copies of the plan from the Collector.

Source: 

Championing the cause of millet farmers

  • Participants at an ecotourism activity conducted by NGO Kudumbam
    Participants at an ecotourism activity conducted by NGO Kudumbam
Kodo Millet, also known as varagu, kodo, haraka and arakalu is grown in places including Uttar Pradesh, Kerala and Tamil Nadu. It forms the main stay of the dietary nutritional requirements. It has high protein content, low fat and very high fibre content. It is also rich in B Vitamins, B6, folic acid and minerals such as calcium, iron, potassium, magnesium and zinc.
Barnyard millet
These are tiny, white, round grains belonging to the millet family. Barnyard millet can produce ripe grain in 45 days from the sowing time under optimal weather conditions.
Small seeds of barnyard millet are processed and used for preparation of different types of porridges. The millet is predominantly starchy. Barnyard millet has the lowest carbohydrate content and energy value amongst all other varieties. Kudumbam, a Non Governmental Organization predominantly working with poor farmers in the rain-fed regions of Kunnandarkoil Union in Pudukkottai district has been promoting food security with the popularisation of millet and pulses. The activities include popularisation of cultivation and consumption of millets.
Training for farmers
Kudumbam has been encouraging farmers to revive their fallow lands through millet promotion. For the producers, it organises trainings and capacity building programmes on millet cultivation and millet seed production.
For the consumer awareness, the organisation organizes millet seed festival and seed exchange exhibitions in schools and colleges ajd recipe competitions on millets. It works for a favourable policy and support from State to encourage millet farmers.
Kudumbam also offers eco tourism for students from schools and colleges. The children at the local villages are also taken on a one-day Nature Walk, where they identify trees, shrubs, herbs, flowers and fruits.
(M.J. Prabu is The Hindu’s Agriculture correspondent. He writes the popular Farmer’s Notebook. Write to him at prabu.mj@thehindu.co.in)
‘Field’ trip for students of Tiruchi, PudukKottai regions
Here is a chance to get a first hand experience of farming. Kudumbam would organise a trip for students from Tiruchi and Pudukottai regions to spend a day in a farm. Interested schools can contact K. Suresh Kanna, Kudumbam,  No. 113/118, Sundaraj Nagar, Subramaniyapuram, Trichy - 620 020. He can also be reached atsureshkanna_kudumbam@yahoo.in, Phone: 099420-99925.

Source: 

Regional mela on organic farming today

The Agriculture Department will organise a ‘Regional Mela on Organic Farming and Products at Rythu Bazaar here on Wednesday. Agriculture officials and farmers from Nellore, Kadapa, Anantapur, Prakasam, Kurnool and Chittoor districts are participating in the one-day event.
Joint Director (Agriculture) Nirmal Nithyanand said that the event would focus on organic farming methods and awareness campaigns for farmers. “Different varieties of paddy, cereals and vegetables will be on display and organic farm product will be available for sale,” he said. “The Agriculture Department is monitoring the organic farming practices in around 600 hectares in the district and we have plans to increase the acreage ,” he said.

Source: 

From farmer to manual scavenge

City contractors are employing agriculturists to clean drains

Some of the labourers can be seen even in the vicinity of Ripon Buildings in Chennai.—Photo: R. Ragu
Some of the labourers can be seen even in the vicinity of Ripon Buildings in Chennai.—Photo: R. Ragu
Thanikachalam Sekar (53) cultivates groundnut in one acre of land in Vettavalam Village of Thiruvannamalai District. However, on Thursday, he was at work cleaning sewage in a stormwater drain on Poonamallee High Road near Ripon Buildings in Chennai, 200 km away from his native village.
Five months after the National Human Rights Commission pulled up the State government for engaging dalits as manual scavengers, civic bodies are deploying a number of farmers belonging to other backward classes for such work.
The Supreme Court has also ordered States to ban manual scavenging.
“I have started cleaning drains in the city and earn Rs. 450 per day. Rain-fed agriculture is very difficult to continue in,” said Mr. Sekar.
The drains are polluted with sewage, yet Mr. Sekar was not wearing any protective gear. He was not concerned about the stigma either.
The contractor who carried out the work on behalf of the Corporation said a number of farmers like Mr. Sekar were engaged in the work. “Farmers from dry areas including Thiruvannamalai are ready to do such work. They also use the wages to procure farm inputs,” he said.
“If we use machines for such operations, the telecom cables will get damaged. So, we have no alternative,” he added.
Chennai Corporation officials reportedly used the services of the contractor after the CMRL diverted waste water, clogging the drains.
“Many hotels near Ripon Buildings illegally let sewage into stormwater drains. The Public Health Department wanted to clean the drain to tackle public health issues,” said an official of Chennai Corporation. Recently, civic body officials in all zones of the city were asked to implement the provisions of the Prohibition of Employment of Manual Scavengers and their Rehabilitation Act, 2013.
In November 2014, the National Human Rights Commission observed that people engaged in manual scavenging are often dalits.
The NHRC also pointed to violation of the Fundamental Rights guaranteed by the Constitution.
“The National Commission for Safai Karamcharis can intervene even if the person is not a dalit. This is a violation of the Act. The person concerned will get a jail term of two years and a fine of Rs.5 lakh,” said Dr. Lata Om Prakash Mahato, Member of National Commission for Safai Karamcharis.

Sourcer: 

Wednesday 18 March 2015

விவசாய நிலங்களில் ரசாயன பூச்சிகொல்லிகளை தவிர்க்கும் புதிய திட்டம்: 150 கிராமங்களில் அமல்

ரசாயன பூச்சிகொல்லிகளைத் தவிர்த்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த "ஒருங்கிணைந்த பூச்சிநோய் மேலாண்மை மாதிரி கிராமத் திட்டம்' என்ற புதிய திட்டம் தமிழகத்தில் 150 கிராமங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் வேளாண் தொழில்நுட்ப அலுவலர்களுக்கான பயிற்சி, சென்னையில் புதன்கிழமை தொடங்கியது. இந்தப் பயிற்சியை வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம், குறைந்த செலவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பூச்சி, பயிர் நோய் மேலாண்மை முறை விவசாயிகளிடையே பரவலாக்கப்படும். இந்தத் திட்டம் 16 மாவட்டங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள 56 வட்டாரங்களைச் சேர்ந்த 150 கிராமங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்கான செலவு ரூ.1.65 கோடியாகும். மாநில திட்டக்குழுவின் பங்களிப்பு ரூ.1.5 கோடியாகவும், விவசாயிகளின் பங்களிப்பு ரூ.15 லட்சமாகும்.
திட்டத்தின் பயன்கள்: இந்தப் புதிய திட்டத்தின் மூலம் ரசாயன பூச்சிகொல்லிகளைத் தவிர்த்து, விவசாயிகளே உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை உற்பத்தி செய்யலாம். சுற்றுச்சூழல் பொறியியல், சுற்றுச்சூழல் அமைப்புப் பகுப்பாய்வு தொழில்நுட்பத்தின் மூலம் விஷமில்லாத உணவு உற்பத்தி ஊக்குவிக்கப்படும். சூழ்நிலையோடு ஒருங்கிணைந்த வேளாண் தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு அளித்து சாகுபடி செலவை குறைப்பது, வேளாண் கழிவுகளை மறுசுழற்சி மூலம் ரசாயன உரமில்லாத உணவு உற்பத்தி செய்வது, விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு பூச்சி நோய் மேம்பாட்டுத் திறனிலும் தன்னிறைவு அடையச் செய்வது ஆகியன இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
புதிய திட்டத்துக்கான பயிற்சியில் மாநில திட்டக் குழு துணைத் தலைவர் சாந்தா ஷீலா நாயர், வேளாண்மைத் துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி, இயக்குநர் மு.ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Source: http://www.dinamani.com/tamilnadu/2015/03/19/விவசாய-நிலங்களில்-ரசாயன-பூச/article2720530.ece

IISc: Chennai highest per capita emitter of greenhouse gases

Buildings with glass facades are energy guzzlers says T.V. Ramachandra of the Centre for Ecological Sciences, IISc, Bengaluru.— photo: M. Karunakaran
Buildings with glass facades are energy guzzlers says T.V. Ramachandra of the Centre for Ecological Sciences, IISc, Bengaluru.— photo: M. Karunakaran
At nearly 39 million tonnes of carbon dioxide equivalent, Delhi has the highest greenhouse gases footprint in the country. Greater Mumbai and Chennai follow Delhi with 23 million tonnes and 22 million tonnes respectively. Ahmedabad accounts for the least (9 million tonnes) GHS footprint among the seven Indian cities studied by a team of researchers at IISc,
Despite the total GHS footprint being 17 million tonnes lesser than Delhi, Chennai has the highest per capita emission of carbon dioxide equivalent — 4.79 tonnes. Kolkata follows Chennai with 3.29 tonnes of carbon dioxide equivalent. Chennai also emits the highest carbon dioxide equivalent per GDP — 2.55 tonnes carbon dioxide equivalent per lakh rupees.
The results, based on the 2009-2010 data, were published recently in the journal Renewable and Sustainable Energy Reviews by a team led by Prof. T.V. Ramachandra of the Energy &Wetlands Research Group, Centre for Ecological Sciences, IISc, Bengaluru.
The paper has looked into all sources of greenhouse gas emissions — transportation, domestic sector, electricity consumption, industry, agriculture and livestock, and solid and liquid waste.
A sector-wise analysis revealed that transportation turned out to be biggest source of emission in cities where rail transportation was either absent or was just being put in place. Of the seven cities studied, Delhi turned out to be the highest emitter of greenhouse gases from the transportation sector. Vehicles in Delhi emitted over 12 million tonnes of greenhouse gases during the study period.
But as percentage contribution from all sources in a city, transportation in Delhi accounted for 32 per cent of greenhouse gases emission. It was 57 per cent in Hyderabad, 43 per cent in Greater Bengaluru, and 25 per cent in Ahmedabad.
“Lack of appropriate public transport system in these cities [Bengaluru and Hyderabad] and haphazard growth due to unplanned urbanisation has led to large-scale usage of private vehicles,” notes the paper.
Contrast this with the three cities — Kolkata, Greater Mumbai and Chennai — where rail forms the backbone of transportation. Based on percentage contribution from all sources, transportation accounted for just 13 per cent in Kolkata, 17.4 per cent in Greater Mumbai and 19.5 per cent in Chennai.
The domestic sector was the next biggest contributor of greenhouse gases emissions. Electricity consumption for lighting and other household appliances, consumption of fuel for cooking were the major sources of domestic emissions. Again, Delhi topped the list with 11.6 million tonnes of gases emitted, which is 30 per cent of the total emissions from all sources in the city.
Chennai comes second with 8.6 million tonnes, which is 39 per cent of the total emissions by the city. Greater Mumbai is less than half with 8.4 million tonnes but 19 per cent of its total emissions. Greater Bengaluru and the other two cities — Hyderabad and Ahmedabad — account for half and one-fourth of Chennai’s respectively.
When seen as percentage contribution from all sources in a city, the domestic sector emerged as the biggest contributor of emissions in all the three cities where rail formed the backbone of transportation — Kolkata (43 per cent), Chennai (39 per cent) and Greater Mumbai (37 per cent).
Electricity for commercial and other services such as street lighting and railways, accounts for 15-24 per cent of total emissions by cities except in the case of Hyderabad and Ahmedabad.
“Buildings with glass façade are energy guzzlers. These buildings were meant for European countries,” said Dr. Ramachandra. “If normal buildings consume 1,300-1,500 units per person per year, those with glass façade consume 14,000-15,000 units per person per year.”
Chennai figured as the top emitter (4.4 million tonnes) in the industrial sector. The emissions come from ammonia production for fertilizer industries, and petro products. There is “insufficient data” in the case of medium- and small-scale industries located within Chennai and other six cities.

Source: 

‘Farmers not getting proper benefits of agriculture’

: Most peasants in Odisha are not getting proper benefits from agriculture because of lack of proper training for use of scientific techniques in cultivation as well as preservation and processing of harvests, said agricultural experts.
They expressed this view during their interaction with peasants during a two day farmer-scientist interface titled ‘Vaarta-agricultural meet’ organised by Tata Steel, which was inaugurated in Berhampur on Wednesday evening.
During this interaction, 15 agricultural scientists will be sharing the insights on best scientific agricultural practices.

Source: 

மாம்பழங்களைப் பழுக்க வைப்பது எப்படி

பதிவு செய்த நாள்

18மார்
2015 
00:00
மாம்பழ சீசன் ஆரம்பித்து விட்டது. காய்கள் கடைகளுக்கு வந்துள்ளன. இந்நேரத்தில் மாங்காய்களை எப்படி பழுக்க வைக்கலாம் என மக்களுக்கு தெரிவிப்பது சரியான தாக இருக்கும் என நம்புகிறேன். மாம்பழங்களை நன்கு முன்றும் முன்பே விவசாயிகள் அறுவடை செய்ய தொடங்கி விடுகின்றனர். அவற்றைத் தரம் பிரித்து, இயற்கையாகப் பழுக்க வைத்தால் 1 வாரம் முதல் 2 வாரம் ஆகி விடுகிறது. ஆனால் சீராகப் பழுக்காமல், எடை, தரம், நிறம், ருசி சீராக இருப்பதில்லை. இதில் எத்திலீன் வாயு பயன்படுத்தி 3 வகைகளில் பழுக்க வைக்கலாம்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக, மதுரை வேளாண் அறிவியல் மையம் கொடுத்துள்ள ஆலோசனைகள்:
முதல் முறை: முதலில் 100 லிட்டர் தண்ணீர் 50 டிகிரி சி சூடான தண்ணீரில் 62.5 மில்லி லிட்டர் எத்திலீனைக் கலக்க வேண்டும். அந்த நீரில் 100 கிலோ மாம்பழங்களை 5 நிமிடம் வைக்க வேண்டும். இந்த நீரை 4 முறை பயன்படுத்தலாம். பின் நீரை வடித்து மாம்பழங்களை வைக்கோலில் பரப்பி வைக்க வேண்டும். 3 முதல் 5 நாட்களில் நன்கு பழுத்து விடும். இந்நீரை 500 மாம்பழங்களுக்கு பயன்படுத்தலாம்.
இரண்டாம் முறை: 2 மில்லி லிட்டர் எத்திலீனை மாம்பழங்களை (காய்) வைத்துள்ள அறையில் ஆங்காங்கே ஒரு குவளையில் வைத்து, மாத்திரை சோடியம் டை ராக்சைடை இடையில் வைத்து, அந்த அறையை காற்றுப் புகாதவாறு மூடி வைக்க வேண்டும். 4-5 நாட்களில் பழுத்து விடும்.
மூன்றாம் முறை: பிளாஸ்டிக் கிரேடுகளில் பழுக்க வைக்க இருக்கும் காய்களை அடுக்க வேண்டும். இடையில் காகிதம் போட வேண்டும். ஒரு கிரேடுக்கும் அடுத்த கிரேடுக்கும் குறைந்தது 1 முதல் 2 அடி இடைவெளி வேண்டும். கிரேடின் அடிப்பகுதி 10 செ.மீ. உயரத்தில் (தரை மட்டத்தில் இருந்து) இருக்குமாறு வைக்க வேண்டும். பின் கிரேடுகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, அறையில் எத்திலீனைத் தெளிக்க வேண்டும். அறையை மூடி வைத்தால் 48 மணி நேரத்தில் நன்கு பழுத்து விடும்.
இதே முறையில் பப்பாளி, வாழை போன்ற எந்த பழத்தையும் பழுக்க வைக்கலாம். இதனால் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு எவ்வித கேடும் இல்லை. எத்திலீன் இரசாயனப் பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும். இம்முறைகள் பற்றி ஏதேனும் சந்தேகம் வந்தால் அணுக வேண்டிய முகவரி.
முனைவர் தி.ரங்கராஜ், பேராசிரியர் மற்றும் தலைவர், முனைவர் சோ.கமல சுந்தரி, வேளாண்மை அறிவியல் நிலையம் (K.V.K) த.நா. வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மதுரை- 625 106. போன் : 0452 - 242 2955, இமெயில்: kvkmdu@tnau.ac.in, www.tnau.ac.in.
-எம்.ஞானசேகர்,
விவசாய ஆலோசகர்
93807 55629

Source: 

சின்ன சின்ன செய்திகள்

பதிவு செய்த நாள்

18மார்
2015 
00:00
கத்தரியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு - தண்டு மற்றும் காய்த்துளைப்பான்: நடவு செய்த 15-20 நாட்கள் கத்தரிச் செடியின் நுனித்தண்டுகள் இலைகளுடன் காய்ந்து தலை காய்ந்து தொங்கி காணப்படும். அவைகளின் இலை உள்ளே பார்த்தால் வெள்ளைநிற புழு காணப்படும். இவ்வகைப் புழுக்கள் காய்கள் பிஞ்சாக இருந்து வளர்ந்து வரும் சமயத்தில் காய்களை குடைந்து சாப்பிட்டு சேதப்படுத்தும்.
இதனைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட செடிகளின் நுனித் தண்டினை கிள்ளி எறிந்து விட வேண்டும். பாதிக்கப்பட்ட காய்களைப் பறித்து அழித்து விட வேண்டும். காய்களில் 50 சதத்தூளை ஒரு லிட்டருக்கு 2-4 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். காய்களைத் தாக்கும் பருவத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை குயினால்பாஸ் 25 இசி. 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீருடன் 2 மில்லி வேப்பெண்ணெய் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கலவையுடன் சேர்த்து தெளிக்க வேண்டும். அல்லது வேப்பங்கொட்டைச்சாறு 50 மில்லியை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
பச்சை மிளகாய்: 1 ஏக்கர் நிலத்தில் 40 டன் பச்சை மிளகாயை அறுவடை செய்து சாதனை படைத்துள்ளார். விழுப்புரம், பிடாகம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அறிவழகன் சொட்டுநீர்ப் பாசனத்தின் கீழ் மிளகாய் சாகுபடி செய்தால் அதிக மகசூல் பெறலாம்.
முதற்கட்டமாக உலிக்கலப்பை, சட்டிக்கலப்பை, கொக்கிக் கலப்பை போன்றவற்றை பயன்படுத்தி, மண்ணை பொலபொலவென்று உழுது, பின் 7 டன் தொழுஉரம் இட்டு மீண்டும் நன்றாக உழுது கடைசி உழவிற்கு முன்பாக விரிடி, சூடோமோனாஸ் போன்ற உரங்களை இட்டு அதன்பின் ஓர் உழவு உழுது கொள்ள வேண்டும். பின்னர் அரை அடி இடைவெளியில் 5 அடி அகலத்திற்கு பார் அமைத்து, பார் ஒன்றுக்கு இரண்டு அடி இடைவெளியில் இரண்டு வரிசைகள் அமைத்து, செடிக்குச்செடி இரண்டரை அடி இடைவெளியில் 35 நாட்களான பச்சை மிளகாய் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். 1 ஏக்கருக்கு மொத்தம் 10,000 நாற்றுகள் தேவைப்படும்.
US எனப்படும் விதை நிறுவனத்தின் US 244 என்ற உயர் ரகத்தை, நாற்றுகள் அனைத்தும் குழித்தட்டு முறையில் விவசாயியே உற்பத்தி செய்கிறார். மேலும் விபரங்களுக்கு அறிவழகன், 98656 54219.
பார்த்தீனியம் களைக்கட்டுப்பாடு: கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கும் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தும். 15-20 மீட்டர் உயரம் வரை வளரும். மேய்ச்சலுக்குச் செல்லும். கால்நடைகளின் உடலில் மோதுவதாலும் தோல் நோய், தோலின் நிறம் மாறி அரிப்பு ஏற்படுதல் மற்றும் நீர் வடிதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. பார்த்தீனியம் செடியின் மகரந்தங்கள் (Pollen) மனிதர்களுக்கும் பெரிய தீங்கினை விளைவிக்கிறது. அதனால் தோல் அரிப்பு ஏற்படுகிறது. இந்த மகரந்தம் காற்றின் மூலம் பரவி, அதை சுவாசிக்க நேரிடும் போது ஆஸ்துமா, காய்ச்சல் மற்றும் நுரையீரல் சம்பந்தமாக நோய்கள் ஏற்படுகிறது.
பூக்கள் உருவாகுவதற்கு முன்பாகவே வேருடன் செடியினைப் பிடுங்கி எடுத்து விட வேண்டும். அதிக அளவில் களை இருக்கும் போது குழியில் இட்டு மக்க வைத்து உரமாகப் பயன்படுத்தலாம்.
சீரகம்: 2வது வாரத்தில் களை எடுக்க வேண்டும். மேகமூட்டம் இல்லாத நாட்களில் நீர் பாய்ச்ச வேண்டும். சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த கந்தகத்தூளை எக்டருக்கு 25 கிலோ என்ற அளவில் அதிகாலை நேரத்தில் செடியின் மீது தூவ வேண்டும். அல்லது 0.20 சத கரையும் கந்தகத் தூளை 100 லிட்டர் தண்ணீரில் 200 கிராம் என்ற அளவில், சமமாக 0.1 சத காலிக்ஸின் 100 லிட்டர் தண்ணீரில் 100 கிராம் என்ற அளவில் தெளிக்க வேண்டும். தேவையைப் பொறுத்து 15-20 நாட்களில் மீண்டும் தெளிக்க வேண்டும்.
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

Source: 

வறண்ட மண்ணில் அசத்தும் "அல்போன்சா'

பதிவு செய்த நாள்

18மார்
2015 
00:00
உலகம் தெரியாத விவசாயியாக இருந்தால் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டும் பலன் இல்லாமல் போகும். விவசாயி வியாபாரியாக மாறினால் இந்த உலகமே திரும்பிப்பார்க்கும் என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளார் சிவகங்கையை சேர்ந்த விவசாயி முருகேசன்.
வறண்ட மண்ணான சிவகங்கை எ.கருங்குளத்தை சேர்ந்த இவரது பண்ணை 2,000 ஏக்கர். பண்ணைக் குட்டைகளுடன் தென்னந்தோப்பு என பலவகை மரங்களை வளர்த்து வருகிறார்.
வறட்சியில் இந்த கிராமம் தத்தளித்த போது பிழைப்புக்காக வேறு ஊருக்கு புலம் பெயர்ந்த இவர் பல தொழில்கள் செய்தாலும், கடைசியாக தேர்வு செய்தது விவசாயம்.
"அல்போன்சா' மாம்பழம் அதிக விலையில் விற்பதை பார்த்து, தோட்டத்தில் அதை அமைக்கும் விருப்பத்தை விவசாய பல்கலையிடம் கேட்டுள்ளார். இந்த மண்ணில் அது வளராது என கூறியதை கேட்டு, அதையே சவாலாக எடுத்து முதல்கட்டமாக 20 ஏக்கரில் மா சாகுடியை துவங்கி இன்று பெரும் ஏற்றுமதியாளராகவும் மாறியுள்ள முருகேசன் கூறியதாவது:
25 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு இயற்கை உரம் மீது தான் நம்பிக்கை இருந்தது. 15 டன் மண்புழுவை தோட்டத்தில் கொட்டி மண் வளத்தை பெருக்கினேன். 4 இடங்களில் பண்ணை குட்டைகள் அமைத்து மழைநீரை சேமித்து வந்ததால், நிலத்தடிநீர்மட்டம் பாதுகாக்கப்பட்டது. மகாராஷ்டிராவில் இருந்து மாங்கன்றுகள் வாங்கி ஏக்கருக்கு 40 மற்றும் 66 மரங்கள் வீதம் நடவு செய்தேன். 
மூன்று மாதத்திற்கு ஒரு முறை களை எடுப்பதற்காக உழவு செய்து, அந்த களைகளே உரமாக்கினேன். சொட்டு நீர் பாசனத்தில் அனைத்து மரங்களும் நல்ல பலனை கொடுத்தது. மும்பையில் ஒரு பழம் ரூ.60க்கு விற்பனையானது. அதே பழம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டால் இன்னும் அதிக வருவாய் கிடைக்கும் என மகன் மதிபாலன் அதற்கான முயற்சிகள் எடுத்தார். விவசாயி வியாபாரியாக மாறினால் தான் விவசாயிக்கு உண்மையான பலன் கிடைக்கும், என்பதையும் நிரூபித்தோம். 
இந்த பழங்களை பேக்கிங் செய்வதற்கு ஜார்கண்ட் தொழி லாளர்கள் ஈடுபடுகின்றனர். மரத்தில் இருந்து விளைந்த மாங்காயை அதன் காம்போடு 3 அங்குலத்தில் "கட்' செய்து, அதை பெட்டியில் வைக்கோல் சுற்றி வெளியிடங்களுக்கு அனுப்புகிறோம். இதற்கு தனி வரவேற்பு உள்ளது. இன்னும் சில மாதங்களில் இதன் சீசன் களை கட்டும். இந்த ஆண்டு நல்ல வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளேன், என்கிறார்.
இந்த சாதனை விவசாயி முருகேசனை வாழ்த்த - 94865 61677ல் அழுத்தலாம்.
-டபிள்யு.எட்வின், மதுரை.

Source: 

Friday 13 March 2015

கோடை இறவை பருத்தி சாகுபடியாளர்களின் கவனத்திற்கு…

பதிவு செய்த நாள்

11மார்
2015 
00:00
கோடைப்பருவத்தில் பருத்தி சாகுபடி செய்ய இருக்கும் விவசாயிகள் அதிக மகசூல் பெற கீழ்காணும் தொழில்நுட்பங்களை கடைபிடிக்கவும்.
சம வயதுள்ள இரகத்தை யாவரும் தேர்ந்தெடுத்து ஏக காலத்தில் (ஒரு வாரத்திற்குள்) விதைத்திட வேண்டும். இயன்றவரை பூச்சி நோய் தாங்கி வளரவல்ல எஸ்விபிஆர் 2 மற்றும் எஸ்விபிஆர் 4 இரகத்தைத் தேர்ந் தெடுத்து பயிரிட வேண்டும். சாணிப்பால் கொண்டு விதை நேர்த்தி செய்து நிழலில் உலர்த்த வேண்டும். பின்னர் விதைப்பதற்கு சற்று முன்பாக ஒரு கிலோ விதைக்கு பத்து கிராம் சூடாமோனாஸ் புளரோசன்ஸ் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்யும். காற்றடிக்கும் திசைக்கு குறுக்காக பார்கள் / வரிசைகள் அமைத்து விதைத்தால் மருந்தடிக்கும் போது மருந்துக்கலவை வீணாகாமல் தடுக்க உதவும்.
வயலைச் சுற்றிலும் உள்ள செடிகள், களைகளை (பூச்சிகளுக்கு மாற்றுணவாகப் பயன்படும்) அகற்றிச் சுத்தமாக வைக்க வேண்டும். ஏக்கருக்கு 10 டன் தொழுஉரம் மற்றும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடுவது பூச்சி மற்றும் நோய் தாக்குதலைக் குறைக்கும். (வேரழுகல், வாடல், நூற்புழு, தண்டுக்கூன் வண்டு, தரைக்கூன் வண்டு, வேர்ப்புழு). விதைத்த 30வது நாளில் சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் (ஏக்கருக்கு ஒரு கிலோ) இடுவது வேரழுகல், வாடல் நோய் தாக்குதலைக் குறைக்கும். நட்ட 20 மற்றும் 30ம் நாள் வேப்பெண்ணெய் 1 சதம் கரைசல் தூரில் ஊற்றுதல் தண்டுக்கூன், வண்டுத் தாக்குதலைக் குறைக்கும். ஊடுபயிராக வாய்க்கால்கள் மற்றும் பாத்தி வரப்புகளின் ஓரங்களில் தட்டைப்பயிறு வளர்த்தால் பொறி வண்டுகள் பெருக்கத்திற்கு துணைபுரியும்.
மேலும் பூச்சியின் வருகையை கண்காணிக்க ஊடுபயிராக மக்காச்சோளம், உளுந்து மற்றும் சீனி அவரை (கொத்தவரை) ஓரப்பயிராக ஆமணக்கு, சூரியகாந்தி பயிரிட வேண்டும். இரட்டை வரிசையில் பருத்தியை பயிரிட்டு இடைவெளியில் ஒரு வரிசை உளுந்து மற்றும் சீனி அவரை (கொத்தவரை) ஊடுபயிராக பயிரிடலாம். உளுந்து ஊடுபயிராக பயிரிட்டால் தத்துப்பூச்சி தாக்குதல் குறையும். சீனி அவரை ஊடுபயிராக பயிரிட்டால் தத்துப்பூச்சி மற்றும் காய்ப்புழு தாக்குதல் குறையும். மேலும் இந்த பயறு வகை ஊடுபயிர்கள் மூலம் வேர் முடிச்சுகளில் தழைச்சத்து உற்பத்தி செய்யப்பட்டு மண்ணின் வளம் மேம்படுகிறது. வெண்டை, ஆமணக்கு மற்றும் சூரியகாந்தி பயிர்கள் முறையே புள்ளிக் காய்ப்புழு, புரடீனியா மற்றும் அமெரிக்கன் காய்ப்புழு தாக்குதலைக் கவர்ந்திழுக்கும். அப்பூச்சிகளை அங்கேயே கட்டுப்படுத்தி விட வேண்டும்.
ஊடுபயிராக வாய்க்கால்களில் மக்காச்சோளம் பயிரிட கிரைசோப்பா, குளவிகள் போன்ற நன்மை தரும் பூச்சிகளின் பெருக்கத்திற்கு துணை செய்யும். வயலைச் சுற்றி அரண் போன்று சோளம் நெருக்கமாக (உயரமாக வளரும் ரகம்) வளர்க்க வேண்டும். (தத்துப்பூச்சி, இலைப்பேன்கள், வெள்ளை ஈ, மாவுப்பூச்சி மற்றும் காய்ப்புழுவின் அந்துகள் வயலினுள் நுழைவதைத் தடுக்க).
இவ்வாறு ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசி ரியர் மற்றும் தலைவர் முனைவர் ம.குணசேகரன் தெரிவிக்கிறார்.

Source: 

சின்ன சின்ன செய்திகள்

பதிவு செய்த நாள்

11மார்
2015 
00:00
கோ.12 ரக சோளம் : மானாவாரி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு இந்த ரகம் உருவாக்கப்பட்டுள்ளது. குளிர்கால மானாவாரி கரிசல் நில பகுதிகளுக்கு ஏற்றது. கோ.8 சோளத்தை விட 22.4 சதம் கூடுதல் மகசூல் கொடுக்கக்கூடியது. சோதனையில் அதிக பட்சமாக ஒரு எக்டருக்கு 5300 கிலோ மகசூல் கொடுத்துள்ளது. மானாவாரியில் அதிக தானிய மகசூலும், அதிக அளவு தீவன மகசூலும், எக்டருக்கு 11.9 டன் கொடுக்கக் கூடியது. குருத்து ஈ தண்டு துளைப்பான், அடிச்சாம்பல் நோய் ஆகியவற்றின் தாக்குதலை தாங்கி வளரும் தன்மையுடையது. தென்மாவட்டங்களில் மானாவாரி சாகுபடிக்கு ஏற்றது. கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தும் போது நன்கு செரிமனமாக்கும் தன்மை கொண்டது.
அரிவாள்மனைப் பூண்டு : சாலை ஓரங்களியெல்லாம் கேட்பாரற்று கிடக்கும் இதன் இலைக்கு இரத்தப்போக்கை நிறுத்தும் ஆற்றல் உண்டு. வெட்டுக்காயத்தின் மீது இதன் இலையைக் கசக்கிப் பிழிந்தால் ரத்தம் வெளியேறுவது சட்டென்று நிற்கும். சிறுசிறு காயங்களுக்கூட ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனைக்கு ஓடும் நாம் காலுக்கு கீழே உள்ள இந்த மூலிகையின் சாற்றைப் பயன்படுத்தி முதலுதவி செய்து கொள்ளலாமே. தமிழ்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் நிறைந்திருப்பது அரிவாள்மனைப் பூண்டு. இலைகளின் ஓரங்கள் ரம்பம் போன்று கூரிய முனையுடைய இந்த மூலிகைகளைச் களைச்செடி என்றே கருதுகின்றனர். மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த இலையை போட்டி போட்டுக் கொண்டு வாங்குகின்றன.
அரிவாள்மனைப் பூண்டின் விற்பனையாளரிடம் பற்றி கூறும் வியாபாரி கருப்பையா. மொபைல் : 98423 95441, ஒரு டன் ரூ.7000ம் வரை விற்பனையாகிறது. விருதுநகர் மாவட்டம் சதுரகிரிமலை அடிவாரத்தைச் சேர்ந்த வியாபாரி மற்றும் விவசாயியான கருப்பையா மழைக்காலத்துல அதிக இலைகளோட இருக்கும் போது அறுவடை செய்தால் இதுல மருத்துவ குணங்கள் அதிகமாக இருக்கும்.
முண்டு மிளகாய் : கார்த்திகையில் விதைத்து சித்திரை, வைகாசி மாதங்களில் அறுவடை செய்யப்படும் முண்டு மிளகாய் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 19,280 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு மிளகாய் சாகுபடிக்கான செலவு ரூ.10,000 செய்தால் 3 மடங்கு லாபம் கிடைக்கும். மாவட்டத்தில் நிலவும் வறட்சியை நன்கு தாக்குப்பிடித்து வளரக்கூடிய முண்டு மிளகாய் தனித்தன்மையே அதன் அதிகபட்சமான காரத்தன்மை தான். அதனால் முண்டு மிளகாய்களுக்கு உலகளவில் நல்ல சந்தை உள்ளது. ராமநாதபுரம் முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
வெள்ளரி "சிம்ரன்' : சின் ஜெண்டா நிறுவனம் ஒரு வெள்ளரிக்காய் ஹைபிரிடை விநியோகிக்க ஆரம்பித்துள்ளது. அனுபவ விவசாயி "ஸ்ரீகாந்த், த/பெ.நாகராஜ் மணியம்மாள், தேன்கனிக்கோட்டை வட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம்-635 008. போன் : 95858 17182, கடந்த முறை சிம்ரன் போட்டிருக்கிறார். 50 கிலோ சிப்பங்களில் சந்தைக்கு எடுத்துச் செல்கின்றன. ஒரு சிப்பம் ரூ.2000க்கும் போகியிருக்கிறதாம். சமயத்துல ரூ.100, 80க்கும், ஏன் விற்காமல் கூட போவதுண்டு என்கிறார். சராசரியாக 50 கிலோ மூடை ரூ.400 - 500க்கு போகும் என்கிறார்.
45 நாட்களில் காய் கிடைக்க ஆரம்பிக்கிறது. அதிலிருந்து ஒன்றரை மாதங்கள் காய் தொடர்ந்து கிடைக்கும். ஒரு நாள் விட்டு ஒருநாள் அறுவடை. ஒரு காய் 200 கிராம் இருக்கும் போது மார்க்கெட் நன்றாக இருக்கும் என்கிறார். 45-வது நாளிலிருந்து 45 நாட்களுக்கு 50 கிலோ சிப்பம் 500 சிப்பங்கள் கிடைக்கும் என்கிறார் விவசாயி.
சித்ரா போன்ற ரகங்கள் போகும் போது காய் 1 அடி நீளமாக வருவதாகவும், சிம்ரன் போகும் போது கால் அடி வருவதாகவும் கூறுகிறார். காய் சைஸ் சின்னதானால் ஈஸியாக மார்க்கெட் ஆகும். சிம்ரனில் ஏகப்பட்ட பூக்கள் வருவதாகவும், எல்லா பூக்களையும் காயாக்கினால் 2-3 லாரி லோடு கிடைக்கும் என்றார் விவசாயி. தொடர்புக்கு: பாலகுரு, சின் ஜெண்டா, கிருஷ்ணகிரி. போன்: 94422 14885.
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

Source: 

தலைமுறைக்கும் அள்ளித் தரும் நெல்லி

பதிவு செய்த நாள்

11மார்
2015 
00:00
நெல்லிக்காயில் வைட்டமின் "சி' மற்றும் மருத்துவ குணங்கள் உள்ளது. இதனால் நெல்லிக்காய்க்கு சந்தையில் நல்ல கிராக்கி உள்ளது.
நெல், கரும்பு, மா, தென்னை, கொய்யா, வாழை பயிரிடும் விவசாயிகள், மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு பிறகே நெல்லியில் வருமானம் கிடைக்கும், அதிக தண்ணீர் தேவை என்று கூறி அதன் சாகுபடியில் ஆர்வம் காட்டுவதில்லை.
ஆனால் பழநி அருகே வேப்பன்வலசை சேர்ந்த வி.கஸ்தூரிசாமி, 15 ஆண்டுகளாக 13 ஏக்கரில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட நெல்லிக்காய் மரங்களை வளர்த்து, ஏக்கருக்கு ரூ. ஒரு லட்சம் வருமானம் ஈட்டி, நெல்லியின் அருமை பெருமையை புரிய வைத்துள்ளார். அவர் கூறியதாவது: 
வழிகாட்டுதல் இல்லாத காரணத்தால் நெல்லிசாகுபடி செய்ய விவசாயிகள் தயங்குகின்றனர். நெல்லியில் என்.ஏ.,7, காஞ்சன், சாக்கையன், கிருஷ்ணா ஆகிய 4 ரக மரக்கன்றுகள் உள்ளன. பழநி தோட்டக்கலைத்துறையில் இலவசமாக 1200 மரக்கன்றுகள், பட்டிவீரன்பட்டியில் ஒரு கன்று ரூ.35வீதம் 1300 மரக்கன்றுகள் என மொத்தம் 7 ஏக்கரில் நெல்லி நட்டுள்ளேன். 15 அடி இடைவெளி விட்டு குழிதோண்டி, வேப்பம் புண்ணாக்கு, குப்பை, சூப்பர் பாஸ்பேட் உரமிட்டு 2,500 மரக்கன்றுகளை பராமரிக்கிறேன்.
ஒரு ஏக்கரில் கன்று நட்டுவளர்த்து, சொட்டு நீர்ப்பாசனம், நிலத்தை தயார்செய்தல், குழிதோண்டுவது, உரமிடுவது என ரூ.40ஆயிரம் செலவாகும். ஒரு ஏக்கரில் 200 கன்றுகள் நடலாம். மூன்று ஆண்டுகளில் நன்றாக வளர்ந்து கைமேல் பலன் கிடைக்கும். ஒரு மரத்திற்கு 20 முதல் 30 கிலோ வரை காய் கிடைக்கும். சீசன் நேரத்தில் ஒருகிலோ ரூ.15 முதல் ரூ.20, மற்றபடி கிலோ ரூ.30 வரை விலை கிடைக்கும்.
டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி நெல்லி மரங்களில் பூவெடுக்கும் காலம். அப்போது மரம் வாடாமல் பார்த்து கொண்டால் போதும். தோட்டகலைத் துறையில் 50 சதவீத மானியத்தில் கிடைக்கும் தேன்பெட்டிகளை வாங்கி மரங்களுக்கு இடையில் வைத்தால் அயல்மகரந்த சேர்க்கையால் 30 சதவீதம் காய்ப்பு அதிகரிக்கும். நமக்கு தேனும் கிடைக்கும். நான் ஒரு ஏக்கரில் 3 தேன்பெட்டிகள் வைத்துள்ளேன்.
ஏப்ரல் முதல் ஜூலை வரை காய்ப்பு அதிகமாக இருக்கும். 12 வயதுள்ள மரத்தில் 60 முதல் 100 கிலோகூட நெல்லி காய் கிடைக்கும். சென்ற ஆண்டு 750 மரங்களில் அதிகபட்சமாக 700டன் வரை காய்கள் கிடைத்தது. சென்னை கோயம்பேடு வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். சொட்டு நீர்ப்பாசன வசதியுடன், இயற்கை உரமிட்டால் நல்ல வருவாய் கிடைக்கும், என்றார். தொடர்புக்கு 99654 92696.
-சி.முருகன், பழநி.

Source: 

Friday 6 March 2015

Workshop on meliponiculture

 The Krishi Vigyan Kendra of the Central Plantation Crops Research Institute here and the State Horticultural Mission have jointly organised a two-day workshop on meliponiculture (rearing of common stingless bees) with an objective to set up one stingless beehive in every homestead in the district.
Farmers to benefit
Leading the session, S. Devaneshan, Head, All-India Coordinated Research Project on Honeybees, College of Agriculture, Vellayani, highlighted the potential of apiculture and meliponiculture as an income-generating enterprise for farmers.
A district like Kasaragod with 58,088 hectares of coconut and 25,374 hectares of rubber cultivations had the potential of rearing 2,53,740 honeybee colonies. 
But, no initiatives had been taken so far to tap even 10 per cent of the potential, he said.
The programme, inaugurated by Ravi Bhat, Director-in-charge, CPCRI, was presided over by Thirumaleshwara Bhat, Deputy Director of Agriculture, Kasaragod.
Sajan Jose of St. Joseph’s College, Moolamattam, also handled the classes. Sixty-five farmers from the district attended the programme, which concluded on Thursday.

Source : http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/workshop-on-meliponiculture/article6968433.ece