Sunday 30 November 2014

மதுரையில் முட்டைக்கோஸ் விளையுமா?ரூ.1.84 கோடிக்கு வீரிய விதைகள் கொள்­முதல்

தமி­ழ­கத்தில், கிருஷ்­ண­கிரி, திண்­டுக்கல், ஈரோடு உள்­ளிட்ட சில மாவட்­டங்­களில் மட்­டுமே, கேரட், முட்­டைக்கோஸ் சாகு­படி செய்­யப்­ப­டு­கி­றது. இவற்றின் தேவை அதிகம். இருப்­பினும், விளைச்சல் போது­மான அளவில் சீராக இருப்­ப­தில்லை. அதனால், கர்­நா­டகா, ஆந்­தி­ராவில் இருந்து, இந்த வகை காய்­க­றி­களை கொண்­டு­வர வேண்­டி­யுள்­ளது.வீரி­ய­மிக்க கேரட், முட்­டைக்­கோஸ்கள், குளிர் பிர­தேசம் மற்றும் மலைப்­பாங்­கான பகு­தி­களில் மட்­டு­மின்றி, பெரம்­பலுார் போன்ற வெப்பம் மிகுந்த மாவட்­டங்­க­ளிலும் விளையும் என, கண்­ட­றி­யப்­பட்டு உள்­ளது. அதனால், மதுரை மற்றும் காரைக்­குடி பகு­தி­களில் முட்­டைகோஸ் மற்றும் கேரட் விளை­யுமா என விவ­சா­யிகள் ஆர்­வத்­துடன் எதிர்பார்க்கின்­றனர்.எனவே, முட்­டைக்கோஸ் மற்றும் கேரட் உற்­பத்­தியை அதி­க­ரிக்க, தோட்­டக்­கலைத் துறை திட்­ட­மிட்டு உள்­ளது. இதற்­காக, தமிழ்­நாடு தோட்­டக்­கலை வளர்ச்சி முக­மை­யான, ‘டான்­ஹோடா’ மூலம், அவற்றின் வீரி­ய­மிக்க விதைகள் கொள்­முதல் செய்­யப்­பட உள்­ளன.
மானிய விலையில்...‘டான்­ஹோடா’ அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது:82 கிலோ முட்­டைக்கோஸ் விதைகள்; 1,025 கிலோ கேரட் விதைகள் என, மொத்தம், 1,107 கிலோ விதைகள் கொள்­முதல் செய்­யப்­படும். இதற்­காக, 1.84 கோடி ரூபாய் ஒதுக்­கப்­பட்டு உள்­ளது.இந்த விதைகள், 2014 – 15 முழு­வதும், விவ­சா­யி­க­ளுக்கு மானிய விலையில் வழங்­கப்­படும். விதை கொள்­முதல் ஒப்­பந்­த­தாரர் தேர்வு விரைவில் நடக்கும்.இவ்­வாறு, அவர் கூறினார்.– நமது நிருபர் –

Source: http://business.dinamalar.com/news_details.asp?News_id=31923&cat=1

No comments:

Post a Comment