Tuesday 2 June 2015

குலைநோய் கட்டுப்படுத்தும் வழிமுறை

திருவிடைமருதூர், : டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கோடை நெற்பயிரில் மாறி வரும் தட்வெட்ப நிலை மற்றும் மழை காரணமாக குலைநோய் மற்றும் இலையுறை குருகல் நோய் தாக்குதல் பரவலாக தென்படுகிறது. தொடர்ந்து பெய்துவரும் மழையால் இந்தநோய் மேலும் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குலைநோய் நட்ட பயிரிலும் சேதம் ஏற்படுத்தும். நோயுற்ற நெற்பயிரில் இலைகளின் மேல் சிறிய பழுப்பு நிற புள்ளிகள் உண்டாகிறது.
குலைநோயானது பைரிகுலேரியா என்ற பூசானத்தால் உண்டாகிறது. இந்தநோய் கிருமிகள் காற்றின் மூலமாகவும் விதைமற்றும் நோயுற்ற வைக்கோல் மூலமாகவும் பரவும் தன்மையுடையது. குலைநோய் கிருமிகள் இலைகளை மட்டுமில்லாமல் தண்டு நெற்கதிரையும் தாக்குகின்றன நோய்ப்பூசனம் தண்டின் கணுக்களைத் தாக்கும்போது பழுப்புநிற புள்ளிகள் உண்டாகிறது. இப்புள்ளிகள் பெரிதாகும்போது கணுக்களின் திசுக்கள் அழுகி எளிதில் ஒடிந்து விடும். நோய்கதிரின் கழுத்துப் பகுதியை தாக்கும்போது பழுப்பு அல்லது கருப்பு நிற புள்ளிகள் உண்டாகின்றன.இதனால் அப்பகுதி அழுகி கதிரினை தாங்கமுடியாமல் சாய்ந்து விடும். இது கழுத்து குலைநோய் எனப்படும்.

பால்பிடிக்கும் முன் தாக்கப்பட்டால் மணிகள் பால் பிடிக்காமல் பதறாகிவிடும். இதனை தடுக்க  தழைச்சத்தான யூரியாரை பிரித்து 4முறையாக மேலுரமாக பொட்டாஷ் உரத்துடன் சேர்த்து இடவேண்டும். வயலின் நீரை நன்றாக வடிகட்டி தேவைகேற்ப பூசானகொல்லி மருந்துகளான கார்பென்டாசிம் 200கிராம் அல்லது அசாக்ஸிஸ்டோபின்200 மற்றும் டிரைசைக்ளசோல் ஆகியவற்றினுள் ஏதாவது ஒன்றினை ஏக்கர் 1க்கு  200லிட்டர் தண்ணீரில் நோய் தென்பட்டவுடன் தெளிக்க வேண்டும். தேவைப்பட்டால் 15நாட்கள் கழித்து மறுமுறை தெளிக்கவும்.இலையுறை கருகல் நோய் தாக்கப்பட்டால் தூர்கள் அதிகமாக வெளிவந்த பின்னரும் தொண்டை கதிர் பருவதிலும் நெற்பயிரில் அதிகாமாக இந்நோய் தாக்குகிறது. முதலில் இந்த நோய் தண்ணீர் மட்டத்திற்கு மேல் உள்ள தண்டுபாகத்தின் இலையுறையில் புள்ளிகளை உண்டாக்குகிறது. இப்புள்ளிகள் தொடக்கத்தில் பச்சை கலந்த சாம்பல் நிறமாக முட்டை வடிவத்தில் அல்லது நீள் உருளை வடிவமாக சுமார் 1செ.மீ நீளத்தில் காணப்படும். பயிரின் அடிப்பகுதியில் உள்ள இலையுறைகளில் நோய்தாக்குதல் காணப்படும்.
இது தண்டு பகுதியையும் அடைந்து தாக்கும். இதை கட்டுப்படுத்த ஏக்கர் 1க்கு 200மில்லி  புரோப்பிகோனோசோல் அல்லது 200கிராம் கார்பண்டாசிம் பூசானகொல்லிகளில் ஏதாவது ஒன்றினை ஒரு ஏக்கருக்கு தேவையான 200லிட்டர் தண்ணீரில் கலந்து இலைகள் மற்றும் தூர் பாகங்கள் நனையுமாறு தெளிப்பதன் மூலம் நோயின் அளவை கட்டுப்படுத்தலாம். என தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் தெரிவித்தனர்.

Source : Dhinakaran

No comments:

Post a Comment