Friday 3 July 2015

பருவநிலை மாற்றத்திற்கு ஏற்றமீள் தன்மை வேளாண் திட்டம்


திண்டிவனம்: பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ற மீள் தன்மையுள்ள வேளாண்மை திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்தது.தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து, பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ற மீள்தன்மையுள்ள வேளாண்மை திட்டங்களை 2010 ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் வழி காட்டுதல்படி, செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாக, வேளாண் பொறியியல் துறையுடன் இணைந்து, இயற்கை வள மேம்பாட்டின் கீழ் சிறு பாசன ஏரி மற் றும் நீர் வரத்து வாய்க்கால் சீரமைக்கும் பணி, வறட்சி கிராமம் காட்டுசிவிறி தேர்வு செய்யப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் மாதம் துவங்கிய வரத்துவாய்க்கால் சீரமைப்பு, ஏரி தூர் வாருதல் மற்றும் அமிழ்வு நீர் குட்டை ஆகிய பணிகள் நிறைவடைந்துள்ளது. இதன்மூலம் பாசன கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்தது.இப்பணியின் செயல்பாடு குறித்து காட்டுசிவிறி மக்களுக்கான விளக்க நிகழ்ச்சி நடந்தது. 

திண்டிவனம் எண்ணெய்வித்து ஆராய்ச்சி நிலைய தலைவர் முனைவர் வைத்தியநாதன் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக இயக்குனர் முனைவர் பிலீப் விளக்க உரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஷீபா வரவேற்றார். திண்டிவனம் கோட்ட வேளாண் பொறியியல் துறை சார்லஸ், முருகன், புண்ணியமூர்த்தி உள்ளிட்ட குழுவினர், திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலைய முனைவர்கள் கவிதா, சங்கீதா, ஜெயராமச்சந்திரன், மயிலம் ஒன்றிய வேளாண் உதவி இயக்குனர் ராஜசேகரன், தோட்டக்கலை அலுவலர் வெங்கடேசன், ஊராட்சி துணைத் தலைவர் சீனிவாசன், முன்னோடி விவசாயி மணிவேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முனைவர் பாலுமகேந்திரன் நன்றி கூறினார்.



Source:

No comments:

Post a Comment