Monday 6 July 2015

விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் பண்ணை வைப்பவர்களுக்கு மானியத்தில் கோழி குஞ்சுகள்


காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் கலெக்டர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் 2015-16ம் ஆண்டு நாட்டுக்கோழி வளர்ப்புதிட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி நாட்டுக்கோழி பண்ணை வைப்பவர்களுக்கு 250 குஞ்சுகள் வழங்கப்படும். 
இதற்கு மானிய தொகையாக ரூ.37,375  வழங்கப்படும். நாட்டுக்கோழி வளர்க்க விரும்புவோர் அருகேயுள்ள கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்காக, குடும்ப அட்டை நகலுடன் சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் பகுதியில் உள்ள வங்கி மேலாளரிடம் கடன் பெறுவதற்கான அனுமதி கடிதம் இணைக்கப்படவேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எனவே, விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment