Monday 15 December 2014

நாமக்கல் முட்டை விலை 3 நாளில் 30 காசுகள் சரிவு

02:13:41

Monday

2014-12-15

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்திலுள்ள கோழிப்பண்ணைகளில் தினமும் 3.20 கோடி முட்டைகள் உற்பத்தியாகிறது. முட்டை விலையை, தேசிய முட்டை ஒருங்கிணைப்பு  குழுவினர் நிர்ணயம் செய்கின்றனர். கடந்த 12ம் தேதி, முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 376 காசில் இருந்து 10 காசு குறைத்து 366 காசாக நிர்ணயம்  செய்யப்பட்டது. நேற்று முன்தினம் மேலும் 10 காசு  குறைக்கப்பட்டு 356 காசானது. நேற்று, மீண்டும் 10 காசுகள் குறைத்து ஒரு முட்டையின் விலை 346 காசாக  நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 3 நாளில் 30 காசுகள் குறைந்துள்ளது.

 இது குறித்து பண்ணையாளர்கள் கூறுகையில், என்.இ.சி.சி அறிவித்த விலையை பண்ணையாளர்கள் பின்பற்றுவதில்லை. வடமாநிலங்களில் குளிர் அதிகரிப்பால் முட்டை  தேவை அதிகரித்துள்ளது. இங்கிருந்து முட்டையை அனுப்பிவிட்டு பணம் வாங்குவதில் பிரச்னை உள்ளது. எனவே, விலையை குறைத்தாவது உள்ளூர் மற்றும்  கேரளாவிலும் முட்டையை விற்கவே விரும்புகின்றனர். இதனால், என்.இ.சி.சி முட்டை விலையை குறைத்து வருகிறது’ என்றனர். பண்ணைகளில் முட்டை விலை  குறைந்தாலும் சில்லரை கடைகளில் விலை குறைக்கப்படவில்லை.

Source: 

No comments:

Post a Comment